UAE Tamil Web

“நீங்க தான் நிஜ ஹீரோ”..கடலில் மூழ்கிய சிறுவனை உயிரைப் பணயம் வைத்து போராடிக் காப்பாற்றிய நபர்..!

ajman

கடந்த வெள்ளிக்கிழமை அன்று அஜ்மானின் கார்னிச் கடற்கரைக்கு நீந்தச் சென்றிருக்கிறார் முகாமது ஹகாமி. 40 வயதான இவர் எகிப்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது கடலையில் சிறுவன் ஒருவன் தத்தளிப்பதைப் பார்த்திருக்கிறார் ஹகாமி.

உடனடியாக கடலில் குதித்த இவர், தனியாளாக போராடி சிறுவனை கரைக்கு அழைத்து வந்திருக்கிறார். அங்கிருந்தவர்கள் தேசிய ஆம்புலன்சை அழைக்க, காப்பற்றப்பட்ட 9 வயது சிறுவன் ஷேக் கலீபா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டான்.

தற்போது சிறுவனின் உடல்நிலை சீராக இருப்பதாக அஜ்மான் காவல்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து ஹகாமியை நேரில் அழைத்து அஜ்மான் காவல்துறை பாராட்டியதோடு சான்றிதழ் ஒன்றினையும் வழங்கியிருக்கிறது.

இதுகுறித்துப் பேசிய அஜ்மான் காவல்துறையின் இயக்குனர் கர்னல் அலி ஜாபர் அல் ஷம்சி,” சமூகத்தின் பாதுகாப்பிற்காக பாடுபடும் ஒவ்வொருவரையும் அஜ்மான் காவல்துறை பாராட்ட தயங்குவதில்லை” என்றார்.

இது தன்னுடைய கடமை என்றும் சிறுவனைக் காப்பாற்றுவதே எனது முதல் நோக்கமாக இருந்தது என ஹகாமி குறிப்பிட்டார். இதனிடையே ஹகாமியின் இந்த செயலை பல்வேறு மக்களும் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.

ajman
0 Shares
Share via
Copy link