UAE Tamil Web

சமூக வலைத்தளத்தில் நல்ல பிள்ளை வேஷம் – பெண்ணை சித்ரவதை செய்தவருக்கு 2 ஆண்டுகள் சிறை!

வெளிநாட்டு பெண்ணை தனது வில்லாவில் அடைத்து வைத்து 7 மணி நேரமாக பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு கொடூரமாக தாக்கிய நபருக்கு துபாய் நீதிமன்றம் 2 ஆண்டுகால சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

துபாயில் சமூக வலைத்தளம் வாயிலாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஆண் ஒருவருடன் வெளிநாட்டு பெண்ணுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது.

Social Media Study Shows Proximity Is Strongest Predictor of Friendship | Science at Rensselaer

மிகவும் பணிவாகவும் அன்பாகவும் ஆண் நண்பர் பேசியதால் இருவரும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இதையடுத்து ஆண் நண்பர் ஓட்டலுக்கு விருந்து உண்ண அழைப்பு விடுத்துள்ளார். அங்கு சக நண்பர்களுக்கு வெளிநாட்டு பெண்ணை அறிமுகப்படுத்தி வைத்த அந்த ஆண் நண்பர், உணவுக்குப் பின்னர் தனது வில்லாவுக்குச் சென்று வரலாம் எனவும் கூறியுள்ளார். சமூக வலைத்தளத்தில் மிகவும் பணிவாக நடந்து கொண்டதை நம்பிய அந்த பெண்ணும் ஆண் நண்பரின் வில்லாவுக்குச் சென்றுள்ளார். அந்த வில்லாவில் யாருமே இல்லாததால் பெண்ணுக்கு சற்று தயக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவரை மாடிக்கு அழைத்துச் சென்று ஆண் நண்பர் அவருடன் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதற்கு சம்மதிக்காததால் கடுமையாக தாக்கி பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். தனக்கு ஒத்துழைக்காவிட்டால் தனது சக நண்பர்களையும் அழைத்து சித்ரவதை செய்வேன் எனவும் அவர் மிரட்டியுள்ளார். 7 மணி நேர போராட்டத்திற்குப் பின் ஒருவழியாக அவரிடம் இருந்து தப்பித்த பெண், உடனடியாக போலீசாருக்கு புகார் அளித்துள்ளார். சமூக வலைத்தளத்தில் நல்ல விதமாக பழகியதால் மட்டுமே அவரை நம்பியதாகவும் தற்போது தான் சுயரூபம் தெரிந்துகொண்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண் வேதனை தெரிவித்துள்ளார். இதையடுத்து பெண்ணை சித்ரவதை செய்த அந்த நபரை போலீசார் கைது செய்து துபாய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் குற்றவாளிக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

0 Shares
Share via
Copy link