UAE Tamil Web

இளைஞரின் ஆண்மையைப் பறித்த மாத்திரை – எழுதிக்கொடுத்த மருத்துவருக்கு விதிக்கப்பட்ட அபராதம் எவ்வளவு தெரியுமா?

doctor

அபுதாபியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனக்கு வயிற்று வலி ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். இளைஞரை சந்தித்த மருத்துவர், அவரை பரிசோதிக்காமலேயே அவருக்கு வலி மாத்திரைகளைக் கொடுத்திருக்கிறார்.

அடுத்த சில நாட்களில் வயிறு வீங்கத் துவங்கவே, மீண்டும் மருத்துவமனைக்கு விரைந்திருக்கிறார் இளைஞர். அப்போது மற்றொரு டாக்டர் இளைஞருக்கு சிகிச்சை அளித்திருக்கிறார். அவருக்கு பாக்டீரியா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கான மாத்திரைகளை தொடர்ந்து உட்கொள்ளுமாறும் மருத்துவர் அறிவுறுத்தியிருக்கிறார்.

இரண்டாவது டாக்டர் கொடுத்த மாத்திரைகளையும் இளைஞர் எடுத்துக்கொள்ள வயிறு வலி மேலும் அதிகரித்திருக்கிறது. இதனால் அதே மருத்துவமனையின் சிறுநீரக சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

தனக்கு ஆண்மைக் குறைவு ஏற்பட்டுள்ளதாக இளைஞர் குற்றம் சாட்ட, முதல் மருத்துவர் அதற்கு 80 சதவீதமும் இரண்டாவது டாக்டர் 20 சதவீதமும் காரணம் என ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

இதனையடுத்து நீதிமன்றத்திற்குச் சென்ற இளைஞர், இரண்டு மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் தனக்கு ஏற்பட்ட இழப்பிற்காக 3 மில்லியன் திர்ஹம்ஸ் இழப்பீடாக வழங்கும்படி கோரிக்கை விடுத்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், மருத்துவர்கள் 5 லட்சம் திர்ஹம்சை இழப்பீடாக இளைஞருக்கு வழங்க உத்தரவிட்டது.

doctor
1 Share
Share via
Copy link