UAE Tamil Web

“அவர் வயிறுக்குள்ள ஏதோ இருக்கு” – துபாய் விமான நிலையத்தில் பிடிபட்ட கடத்தல் ஆசாமி..!

Stock-Dubai-airport-

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் வயிறு முழுவதும் கொகெய்னுடன் பிடிபட்ட ஆப்பிரிக்க ஆசாமியை காவல்துறை கைது செய்திருக்கிறது.

சோதனைப் பகுதியில் நின்றிருந்த இந்த பயணி வித்தியாசமாக நடந்துகொள்ளவே, அதிகாரிகளுக்கு அவர்மீது சந்தேகம் வந்திருக்கிறது. அவரை ஸ்கேன் செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டபோது தன்னிடம் எதுவுமில்லை என அவர் தெரிவித்திருக்கிறார்.

அவரது உடலை ஸ்கேன் செய்கையில் அவருடைய வயிற்றுக்குள் வெள்ளை நிறத்தில் குப்பிகள் இருப்பதை அதிகாரி பார்த்திருக்கிறார். உடனடியாக அவரது வயிறு விஷயத்தை மேலதிகாரிகளிடம் தெரிவிக்க, ஆப்பிரிக்க ஆசாமியை கைது செய்தது துபாய் காவல்துறை.

போதை மருந்து தடுப்புத்துறையும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. அவருடைய வயிற்றுக்குள் இருந்த கொகெய்ன் குப்பிகளில் 13 விமான நிலையத்திலேயே எடுக்கப்பட்டது.

உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மீதமிருந்த குப்பிகளும் அகற்றப்பட்டன. மொத்தம் 36 குப்பிகள் அவரது வயிற்றிலிருந்து அகற்றப்பட்டதாக காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

Stock-Dubai-airport-
0 Shares
Share via
Copy link