UAE Tamil Web

“வாட்சாப்பில் என்னை அசிங்கமாக திட்டிட்டார், 1 லட்சம் திர்ஹம்ஸ் இழப்பீடு வேண்டும்” – நீதிமன்றத்திற்கு வந்த வினோத வழக்கு..!

whatsapp

வாட்சாப் ஆடியோ மூலமாக தன்னை அசிங்கமாக திட்டிவிட்டார் என ஒருவர் தொடுத்த வழக்கு இன்று அல் அய்ன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பாதிக்கப்பட்டவருக்கு 10,000 திர்ஹம்ஸ் இழப்பீடாக குற்றவாளி வழங்கவேண்டும் என உத்தரவிட்டனர்.

ஆடியோ மெசேஜ்

சில தினங்களுக்கு முன்னதாக வழக்குத் தொடர்ந்தவரின் வாட்சாப் எண்ணிற்கு ஒரு ஆடியோ மெசேஜ் வந்திருக்கிறது. “உன்னுடைய வளர்ப்பை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது” என குற்றவாளி வாய்ஸ் மெசேஜ் அனுப்பியிருக்கிறார். இதனையடுத்து நீதிமன்றத்தை நாடிய பாதிக்கப்பட்டவர் 1 லட்சம் திர்ஹம்ஸ் இழப்பீடாக பெற்றுத்தரும்படி தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் 10,000 திர்ஹம்ஸ் மட்டுமே இழப்பீடாக வழங்க கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிகழ்ச்சியினால் தனக்கு ஏற்பட்ட அவமானம் மற்றும் சமூகத்தில் தனக்கு இருக்கும் மதிப்பு ஆகியவற்றோடு ஒப்பிடுகையில் இந்த இழப்பீட்டுத் தொகை மிகவும் குறைவு என அவர் கருதியிருக்கிறார்.

ஆகவே, மேலவை நீதிமன்றத்தை அவர் நாடியிருக்கிறார். அங்கே வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரின் சமூக நிலைமையை கணக்கில்கொண்டே இந்த அபராதத்தொகை விதிக்கப்பட்டுள்ளது. என அதே 10,000 திர்ஹம்ஸ் தொகையை இழப்பீடாக வழங்கும்படி தீர்ப்பளித்தது நீதிமன்றம்.

whatsapp
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap