UAE Tamil Web

கடனைக் கொடுக்காததால் கத்திக்குத்து ; விமானம் ஏறிய குற்றவாளியை கடைசி நிமிடத்தில் சுற்றிவளைத்த காவல்துறை..!

KNIFE WITH BLOOD

ராஸ் அல் கைமாவில் தனது நாட்டினைச் சேர்ந்த இருவரை கத்தியால் குத்திவிட்டு சொந்த நாட்டிற்கு தப்பிச்செல்ல முயற்சித்த நபரை, விமான நிலையத்தில் காவல்துறை கைது செய்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கொடுத்த கடனை குற்றவாளி திரும்பக் கேட்கும் வேளையில் ஏற்பட்ட தகராறு எல்லை மீறியிருக்கிறது. ஒருகட்டத்தில் கோபமடைந்த நபர், இருவரையும் கத்தியால் குத்தியிருக்கிறார்.

உடனடியாக அங்கிருந்து தப்பிச்சென்ற அவர், ராஸ் அல் கைமா விமான நிலையத்திற்குச் சென்றுள்ளார். தனது சொந்த நாட்டிற்குச் செல்ல அவர் முயற்சிக்கையில் விமான நிலையத்தில் இருந்த காவல்துறையினர், அவரது சட்டையில் இருந்த ரத்தத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக அவரை காவல்துறை கைது செய்திருக்கிறது. பின்னர் அவரது கொலை முயற்சி குறித்தும் விமான நிலைய காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரியவந்திருக்கிறது.

கத்தியால் தாக்கப்பட்ட இருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றனர். அங்கே அவர்களுக்கு அவசர சிகிச்சை அளிக்கப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து விரைந்து காவல்துறைக்கு தகவல் அளித்த பொதுமக்கள் மற்றும் விமான நிலைய காவல்துறை அதிகாரிகள் ஆகியோருக்கு ராஸ் அல் கைமாவின் காவல்துறை இயக்குனர் அலி அப்துல்லா பின் அல்வான் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

KNIFE WITH BLOOD
0 Shares
Share via
Copy link