UAE Tamil Web

அமீரகத்தை அச்சுறுத்தும் மின்னஞ்சல் திருட்டு – “இதைச் செய்யுங்கள் முதலில்” எச்சரிக்கும் காவல்துறை..!

hacker

கடந்த சில நாட்களாக அபுதாபி டிஜிட்டல் ஆணையத்திற்கு மின்னஞ்சல் மூலமாக தகவல்கள் திருடப்படுவதாக புகார்கள் வந்துகொண்டு இருக்கின்றன. இதனையடுத்து பொதுமக்கள் யாரும் நம்பகத்தன்மை இல்லாத இணையதளங்களில் உங்களுடைய சுய மற்றும் வங்கித் தகவல்களை குறிப்பிடவேண்டாம் என ஆணையம் எச்சரித்துள்ளது.

அதிக மின்னஞ்சல்கள்

ஒரு குறிப்பிட்ட எண்ணில் இருந்து குறுகிய காலத்திற்குள் தொடர்ந்து உங்களுக்கு சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்கள் வந்தால் அவை வைரஸாகக் கூட இருக்கலாம். இது உங்களது மெமரியை ஆக்கிரமிப்பதோடு மின்னஞ்சல் சர்வரையே பாதிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

உங்களது கணிணியில் உள்ள வைரஸ்களை அழிப்பதோடு, OS மற்றும் நீங்கள் பயன்படுத்தும் சாப்ட்வேர்களை அப்டேட் செய்துகொள்வது இந்தத் தாக்குதலில் உங்களைப் பாதுகாக்கலாம்.

மின்னஞ்சல், குறுஞ்செய்தி மற்றும் போன்கால் போன்ற எந்த வடிவிலும் உங்களுடைய தனிப்பட்ட தகவல்களைப் பகிராதீர்கள். குறிப்பாக உங்களுடைய வங்கிக் கணக்கு எண், ஐடி எண், பாஸ்வேர்ட் போன்றவைகளை ஒருபோதும் நம்பகத்தன்மை இல்லாத இணையதளங்களில் குறிப்பிட வேண்டாம் என பொதுமக்களை காவல்துறை எச்சரித்துள்ளது.

அதேபோல, முன்பின் தெரியாத இணையதளங்களில் இருந்து எவ்வித ஆவணங்களையும் தரவிறக்க வேண்டாம் எனவும் இது உங்களுடைய கணினியை வைரஸ் தாக்குதலுக்கு உட்படுத்தலாம் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

hacker
0 Shares
Share via
Copy link