UAE Tamil Web

பிரம்மாண்ட கப்பலை சாம்பலாக்கிய தீவிபத்து – 4 மணிநேரம் நீடித்த தீயணைப்பு பணி..!

fire accident

ராஸ் அல் கைமாவின் அல் ஜசீரா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட கப்பலில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

கப்பலில் இரவு நடைபெற்றுக்கொண்டிருந்த பராமரிப்புப் பணிகளின் போது ஏற்பட்ட விபத்தினால் தீ பற்றியிருக்கிறது.

இந்த விபத்தினால் உயிரிழப்பு ஏதுமில்லை எனவும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் சிவில் பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது.

தீயணைப்புப் படை வீரர்கள் 1.20 மணி வரையில் போராடி தீயை அணைத்தனர். பின்னர் நடத்தப்பட்ட குளிர்விக்கும் பணிகள் 4 மணிவரையில் நீடித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

fire accident
0 Shares
Share via
Copy link