UAE Tamil Web

90% தள்ளுபடி, 1 வாங்கினால் 1 இலவசம் – அமீரகத்தில் துவங்கிய 11:11 சேல்ஸ்..!

offer

அமீரகத்தில் நவம்பர் மாதத்தில் 11:11 சேல்ஸ் பலராலும் எதிர்பார்க்கப்படும் ஒன்றாகும். இந்த வருட தள்ளுபடி விற்பனையில் குறிப்பிட்ட சில பொருட்களுக்கு பூஜ்ஜிய சதவீத மாதாந்திர கட்டண திட்டங்கள், வீடு மற்றும் சமையலறை பொருட்கள், ஸ்மார்ட் போன், டேப்லட், பொம்மைகள், உடைகள் ஆகியவற்றிற்கு அட்டகாசமான ஆஃபர்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி இந்த வருட நவம்பர் சேல்ஸ்க்கு பல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் போட்டிபோட்டுக்கொண்டு ஆஃபர்களை அறிவித்துள்ளன. அவை குறித்து கீழே காணலாம்.

நூன்

அமீரகத்தின் மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான noon.com நவம்பர் 11:11 தள்ளுபடியை நவம்பர் 10 – 12 ஆம் தேதிவரையில் மக்கள் அனுபவிக்கலாம் என அறிவித்திருகிறது. வாங்கும் பொருட்களுக்கு 80 சதவீத தள்ளுபடி அளிக்கும் இந்நிறுவனம் முக்கிய பிராண்ட்களின் பொருட்களை ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என விற்று வருகிறது.

அமேசான்

பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அமேசானும் நவம்பர் 10 – 12 ஆம் தேதிவரையில் தள்ளுபடியை அறிவித்துள்ளது. அமேசான் தளத்தில் லேப்டாப், மொபைல் போன்கள் உள்ளிட்ட எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு 30 சதவீத தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. அமேசான் பிரைம் வைத்திருப்பவர்கள் ஒரு நாள் முன்னதாகவே இந்த சலுகைகளைப் பெறலாம் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கார்ட்லோ

அமீரகத்தின் மற்றொரு பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான கார்ட்லோவும் நவம்பர் 10 – 12 ஆம் தேதிவரையில் ஆஃபர்களை வழங்கிவருகிறது. லேப்டாப், மொபைல் போன்கள், வாசனைத் திரவியம், கைக்கடிகாரம் உள்ளிட்ட பல பொருட்களுக்கு அதிரடி தள்ளுபடி அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இரண்டு தள்ளுபடி

இதே நவம்பர் மாதத்தில் ஒயிட் ஃப்ரைடே (White Friday) எனப்படும் சிறப்பு தள்ளுபடித் திருவிழா நவம்பர் 22 – 28 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் 2500 பிரீமியம் பிராண்டுகளின் பொருட்களை 90 சதவீத தள்ளுபடியில் வாங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைபர் மண்டே (Cyper Monday)

நவம்பர் 29 ஆம் தேதி ஷாப்பிங் செய்பவர்களுக்கு 1000 க்கும் மேற்பட்ட எலெக்ட்ரானிக் பொருட்களுக்கு 80 சதவீதம் வரையில் தள்ளுபடி அளிக்கப்பட இருக்கிறது.

offer
7 Shares
Share via
Copy link