UAE Tamil Web

வீடியோ: ஜஸ்ட் மிஸ்.. கார் எஞ்சினுக்குள் சிக்கிய குட்டிப் பூனை.. சரியான நேரத்தில் வெளியே எடுத்த நபர்..!

kitten

குளிர்காலமோ மழைக்காலமோ வந்தால் பூனைக்குட்டிகள் கதகதப்பான இடங்களைத் தேர்ந்தெடுப்பவை. கார் எஞ்சின் பகுதிகள் பூனைகளுக்கு மிகவும் பிடித்தமான இடங்கள். சில சமயங்களில் இதனால் அவற்றின் உயிருக்கும் ஆபத்து ஏற்படவும் வாய்ப்புண்டு.

இப்படித்தான் அமீரகத்தில் வசித்துவரும் ஃபகத் சமீபத்தில் தனது காரை ஸ்டார்ட் செய்ய முயற்சிக்கும் போது, மியாவ் சத்தத்தைக் கேட்டிருக்கிறார். சுதாரித்துக்கொண்ட ஃபகத், காரை பரிசோதிக்கத் துவங்கியிருக்கிறார்.

அப்போது காரின் எஞ்சின் பகுதியில் பதுங்கியிருந்த பூனையை லாவகமாக வெளியே எடுத்திருக்கிறார். அதிர்ஷ்டவசமாக பூனைக்கு காயங்கள் ஏதும் ஏற்படவில்லை. பிறந்து சில வாரங்களே ஆன பூனையை ஃபஹத் மீட்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகப் பரவிவருகிறது.

kitten
0 Shares
Share via
Copy link