அமீரகத்தில் கட்டுமானத் தளங்களில் உள்ள தொழிலாளர்கள் பிற்பகல் நேரங்களில் வேலை செய்யும் நேரத்தில் சற்று ஓய்வெடுக்க, நாளை ஜூன் 15, 12:30 முதல் மாலை 15:00 வரை அனுமதி அளிக்கப்படும். இந்த செயல்பாடு செப்டம்பர் 15, 2022 வரை அமலில் இருக்கும்.
தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான பணிச்சூழலை வழங்குவதையும், அதிக பாதிப்புகளில் இருந்து விடுபடுவதையும் நோக்கமாகக் கொண்ட திட்டம் Midday Break. தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பிற்கான அமைச்சகத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்புக்கு இணங்க, மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் தொடர்ந்து 18வது ஆண்டாக இந்த Midday Break திட்டத்தை அமல்படுத்துகிறது.
அமைச்சகத்தின் ஸ்மார்ட் அப்ளிகேஷன் மூலம் அறிக்கைகளைப் பெறுவதோடு, திங்கள் முதல் சனி வரை 8:00 முதல் 20:00 வரை பல மொழிகளில் செயல்படும் 600590000 என்ற எண்ணில் Midday Break விதி மீறல்கள் குறித்த சமூக உறுப்பினர்களிடமிருந்து அறிக்கைகள் பெறப்படுகின்றன.
சில தொழில்கள் மற்றும் வேலைகளுக்கு தொழில்நுட்ப காரணங்களுக்காக Midday Breakல் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. Asphalt கலவையை பரப்புதல், கான்கிரீட் ஊற்றுதல், பழுதுபார்ப்பு, உள்ளிட்ட வேலைகள் இதில் அடங்கும்.
அரேபிய மொழியைத் தவிர தொழிலாளி புரிந்துகொள்ளும் மொழியில், முதலாளிகள் தினசரி வேலை நேர அட்டவணையை ஒரு முக்கிய இடத்தில் வெளியிட வேண்டும்.
மேலும் Midday Break திட்டத்தை மீறும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும், ஒவ்வொரு தொழிலாளிக்கும் 5,000 திர்ஹம் மற்றும் தடையை மீறி பல தொழிலாளர்கள் பணிபுரிந்தால் அதிகபட்சம் 50,000 திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படும்.
அமீரகத்தில் பொதுவாக வெயில் அதிகமாக இருப்பதால் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை வெயிலில் வேலைசெய்யும் பணியாளர்களுக்கு இந்த Midday Break வழங்கப்பட்டு வருகின்றது.