UAE Tamil Web

அமீரக பொருளாதார அமைச்சகத்தின் அனைத்து கஸ்டமர் சர்வீஸ் சென்டர்களும் திடீர் மூடல்.!

closed

அமீரக பொருளாதார அமைச்சகம் அதன் அனைத்து வாடிக்கையாளர் சேவை மையங்களையும் மொத்தமாக மூடியுள்ளது. சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஃபெடரல் அரசினுடைய முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுளள்து.

அரசு வழங்கும் சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதிலும், செயல்திறனை அடைவதிலும் தலைமையின் கட்டளைகளுக்கு ஏற்ப அனைத்து வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்களையும் மூடுவதாக பொருளாதார அமைச்சகம் தனது அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

டிஜிட்டல் மயமாக்கல் மூலம் பொதுமக்கள் எளிதாகவும், வசதியுடன் சேவைகளைப் பெற உதவுவுவதில் பங்களிக்கும் கூட்டாட்சி நிறுவனங்களில் பொருளாதார அமைச்சகம் முன்னணியில் உள்ளதாக அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் அமீரக அமைச்சக மேம்பாட்டு கவுன்சில் (Ministerial Development Council) 50% மத்திய அரசு சேவை மையங்களை குறைப்பது குறித்தும், அவற்றை 2 ஆண்டுகளுக்குள் டிஜிட்டல் தளங்களாக மாற்றும் திட்டம் குறித்து விவாதித்தது.

இதன்படி முதற்கட்டமாக மொத்தம் 282 சேவை மையங்களை மூட முடிவு செய்யப்பட்டது. இவற்றில் 2021-ம் ஆண்டின் முதல் காலாண்டில் 59 மையங்கள் மூடப்படும். மீதமுள்ள மையங்கள் 2021 மற்றும் 2022-க்கு இடையில் மூடப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்தமாத தொடக்கத்தில், துபாய் மின்சாரம் மற்றும் நீர் ஆணையம் (Dewa) தனது ஸ்மார்ட் சேவைகளை மேம்படுத்த மார்ச் முதல் டிராகன் மார்ட் 2-ல்(Dragon Mart 2 ) உள்ள தனது கஸ்டமர் கேர் சென்டரை மூடுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

எந்தவொரு விசாரணைகளுக்கும் பொருளாதார அமைச்சகத்தை தொடர்பு கொள்ள விரும்பும் வாடிக்கையாளர்கள் 8001222 என்ற அதன் கால் சென்டர் எண்ணை தொடர்பு கொள்ளலாம் அல்லது info@economy.ae என்ற ஐடி-க்கு மெயில் அனுப்பலாம்.

closed
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap