UAE Tamil Web

பொருட்களை ஆசையுடன் பார்த்த 12 ஆதரவற்ற குழந்தைகள் – அனைத்தையும் வாங்கிக் கொடுத்த அமீரக அமைச்சகம்..!

child

இஸ்லாமிய நம்பிக்கையின்படி ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதத்தின் 15 வது நாள் ஆதவற்றோர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு 12 அனாதைக் குழந்தைகளின் ஆசைகளை அமீரக சமூக மேம்பாட்டுத்துறை நிறைவேற்றியுள்ளது.

ஃபி அல் ஷோஃபா (Fi Al Shoufa) எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்திற்கு “உங்களுடைய விருப்பத்தின்படி” என்பது பொருளாகும்.

ஆதரவற்ற குழந்தைகளின் வாழ்வில் மகிழ்ச்சியை உருவாக்கும் நோக்கத்தோடு துவங்கப்பட்ட இந்தத் திட்டத்தை சமூக பாதுகாப்பு அமைச்சகம் மேற்பார்வையிடுகிறது. பரிசுகள் வாங்கும் தொகையை இஸ்லாமிய வங்கி ஏற்கிறது.

எமிரேட்ஸ் ரெட் கிரெசன்ட் மற்றும் அஜ்மான் மையம் ஆகியவை தகுதியான குழந்தைகளின் பட்டியலைத் தயாரிக்கின்றன.

இதேபோல ஆதரவற்றோர்களின் நலனுக்காக துவங்கப்பட்ட மற்றொரு திட்டமான orphan’s joy-ன் (ஆதரவற்றோருக்கான மகிழ்ச்சி) மூலமாக ஆதரவற்ற குழந்தைகளின் ஆசைகள் மற்றும் எதியா (பணப்பரிசு) ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.

அமீரகத்தின் நீடித்த வளர்ச்சியில் இதுபோன்ற ஆதரவற்ற குழந்தைகளின் வளமான பங்கும் இருக்க வேண்டும் என்பதற்காக அரசு இம்மாதிரியான திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்திவருவது குறிப்பிடத்தக்கது.

child
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap