UAE Tamil Web

அரச முத்திரையோடு வரும் போலி Message.. மக்களையும், தொழிலாளர்களையும் குறிவைக்கும் கும்பல்? – எச்சரிக்கும் அமீரக போலீசார்

அமீரகத்தில் அரசாங்க சின்னங்களைக் கொண்ட சந்தேகத்திற்கிடமான வகையில் பரவும் குறுஞ்செய்திகள் குறித்து அதிகாரிகள் நேற்று இரவு குடியிருப்பாளர்களை எச்சரித்துள்ளனர். உள்துறை அமைச்சகம் வெளியிட்ட ஒரு ட்வீட்டில் இதை தெரிவித்துள்ளது.

“டிஜிட்டல் மோசடி செய்பவர்கள், அரசாங்க நிறுவனத்திடமிருந்து வந்த செய்தி என்று பெறுநரை நம்ப வைப்பதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்ற முயற்சிக்கின்றனர். இந்த சந்தேகத்திற்குரிய செய்திகளில் பெரும்பாலும் இணைப்பு (Link) அல்லது ஒரு முறை கடவுச்சொல் (OTP) இருக்கும்” என்று அமைச்சகம் கூறியுள்ளது.

அரசு நிறுவனங்களின் செய்திகள் அதிகாரப்பூர்வ எண்களில் இருந்து மட்டுமே அனுப்பப்படும் என்று அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். ஆகவே மக்கள் மிகுந்த விழிப்புடன் செயல்பட வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வதற்காக இதுபோன்ற செய்திகளை குறித்து புகாரளிக்குமாறு குடியிருப்பாளர்களை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

அரசு முத்திரைகளை கொண்டே மோசடி செய்யும் கும்பல்களின் ஆதிக்கம் உலக அளவில் பெருகி வருகின்றது. இது அந்நாட்டில் உள்ள குடியிருப்பாளர்களை மட்டுமல்லாமல் அங்கு பணி செய்து வரும் புலம்பெயர் தொழிலாளர்களையும் நோக்கி குறிவைக்கிறது.

ஆகவே மக்களும், அமீரகத்தில் வேலை செய்து வரும் பிற நாட்டு தொழிலாளர்களும் மிகுந்த கவனத்தோடு இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap