UAE Tamil Web

அமீரகத்திற்கான இந்தியாவின் புதிய தூதர் நியமனம்..!

Sunjay

அமீரகத்திற்கான இந்தியாவின் தூதராக செயல்பட்டுவந்த திரு.பவன் கபூர் ரஷியாவிற்கான இந்தியத் தூதராக செயல்படுவார் என இந்திய அரசு அறிவித்திருந்த நிலையில் திரு. சஞ்சய் சுதிர் அமீரகத்திற்கான புதிய இந்தியத் தூதராக பதவியேற்றுள்ளார்.

இதற்கான ஆவணங்களை அமீரக வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகத்தின் விவகாரத்துறை துணைச் செயலாளரான ஆலியா முகமது அல்மெஹ்ரேஸி (Alya Mohamed Almehrezi) அவர்களிடம் ஒப்படைத்திருக்கிறார் சுதிர்.

இந்தியா – அமீரகம் இடையேயான நட்புறவு மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் சிறந்து விளங்கிடும் வகையில் பணியாற்ற வாழ்த்துவதாக ஆலியா தெரிவித்துள்ளார். இதற்கு நன்றி தெரிவித்த சுதிர், அமீரகத்தின் தலைவரும் அபுதாபியின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் அவர்களுடைய எதிர்கால முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள் தன்னை பெரிதும் ஈர்ப்பதாக புகழராம் சூட்டியுள்ளார்.

Sunjay
0 Shares
Share via
Copy link