அமீரகத்தின் ஃபலாஜ் அல் முவல்லா (Falaj Al Mualla) பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3.23 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கமானது 2.3 ஆகப் பதிவாகியிருக்கிறது. இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் மாதத்தில் அல் ஃபயா மற்றும் திப்பா அல் புஜைராவில் இருமுறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
