UAE Tamil Web

அமீரகத்தில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆகப் பதிவு..!

Earthquake

அமீரகத்தில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய வானிலை ஆய்வுமையம் உறுதிப்படுத்தியிருக்கிறது.

நேற்று இரவு 10 மணிக்கு, அரேபியன் கடல் பகுதியில் நிகழ்ந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆகப் பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய வானிலை ஆய்வுமையத்தின் அறிக்கையின்படி பூமிக்கு அடியே 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீங்கள் நிலநடுக்கத்தை உணர்ந்தீர்கள் என்றால் கமெண்டில் சொல்லுங்கள்.