UAE Tamil Web

மழை வேண்டி அமீரக மசூதிகளில் வரும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள சிறப்பு தொழுகை (சலாத்-அல்-இஸ்திஸ்கா)..

friday

கொரோனா தொற்று காரணமாக பல மாதங்களாக அமீரகத்தில் ஜும்மா தொழுகை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 4-ம் தேதி முதல் மீண்டும் ஜும்மா தொழுகைக்கு அனுமதி வழங்கப்பட்டது.

- Advertisment -

இதனை அடுத்து அமீரக மசூதிகள் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகையை 30 % திறனுடன் மீண்டும் தொடங்கியுள்ளன. இந்நிலையில் அமீரகம் முழுவதும் உள்ள மசூதிகளில் டிசம்பர் 18 வரும் வெள்ளிக்கிழமையன்று சலாத்-அல்-இஸ்திஸ்கா எனப்படும் சிறப்பு மழை தொழுகைகள் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் மழை பெய்ய வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுமாறு ஜனாதிபதி பெருமதிப்பிற்குரிய ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் அவர்களின் அறிவுறுத்தலை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து மழைக்கான சிறப்பு பிரார்த்தனை வரும் டிசம்பர் 18-ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள மசூதிகள், முசலாக்கள் மற்றும் பிரார்த்தனை தளங்களில் மேற்கொள்ளப்பட உள்ளது. அமீரக மசூதிகளில் இந்த சிறப்பு தொழுகைகள் ஜும்மா தொழுகைக்கு 10 நிமிடங்களுக்கு முன் நடத்தப்பட உள்ளது.

நிலம் மழையால் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்று பிரார்த்தனை செய்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பாரம்பரியத்திற்கு ஏற்ப இந்த மழை பிரார்த்தனை நடைபெறும்.