UAE Tamil Web

தனது மகனைக் கொலை செய்தவரை மன்னித்த பெற்றோர் : ஷார்ஜா நீதிமன்றத்தில் நிகழ்ந்த நெகிழ்ச்சியான சம்பவம்..!

Knife_generic_

ஷார்ஜாவில் மரணதண்டனை விதிக்கப்பட்ட நபர் ஒருவரின் தண்டனையை 7 ஆண்டுகளாக குறைத்துள்ளது மேல்முறையீட்டு நீதிமன்றம். தன்னோடு அறையில் தங்கியிருந்த இளைஞரை சமையல் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆசியாவைச் சேர்ந்த நபர் மீதான வழக்கில் கீழவை நீதிமன்றம் மரணதண்டனை விதித்திருந்தது.

மேலும் அவருடைய உறவினர் ஒருவரையும் பயங்கரமாக குற்றவாளி தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குடிபோதையில் இருந்த குற்றவாளியை அறையில் தங்கியிருந்தவர்கள் தடுத்ததால் உறவினர் உயிர்பிழைத்திருக்கிறார்.

இந்நிலையில் மரணதண்டனையை எதிர்த்து குற்றவாளி மேல்முறையீடு செய்திருந்தார். இறந்தவரின் குடும்பம் குற்றவாளியை மன்னிப்பதாகத் தெரிவித்ததையடுத்து குற்றவாளியின் தண்டனை 7 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது.

மேலும், இறந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையாக 2 லட்சம் திர்ஹம்ஸ் வழங்க குற்றவாளி ஒப்புக்கொண்டிருக்கிறார்.

Knife_generic_
0 Shares
Share via
Copy link