அமீரகத்தில் உள்ள விமான நிறுவனங்கள் தங்களிடம் இருக்கின்ற பல்வேறு காலியிடங்களை நிரப்ப உள்நாட்டிலும் பல்வேறு நாடுகளிலும் இருந்து பணியாளர்களை பணியமர்த்தும் பணியை தொடர்ந்து நடத்தி வருகின்றன.
நமது நாட்டின் உள்ளூர் ஏர்லைன்ஸ் நிறுவனங்களான எமிரேட்ஸ், எதிஹாட் ஏர்வேஸ், Fly Dubai, ஏர் அரேபியா மற்றும் Wizz Air Abu Dhabi சுமார் 300 பேரை முழுநேர வேலைகளுக்கு வெவ்வேறு திறன்களில் பணியமர்த்த முடிவு செய்து அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளன.
துபாயை தளமாகக் கொண்ட எமிரேட்ஸ், கேபின் க்ரூ, காண்டாக்ட் சென்டர் ஏஜெண்டுகள், விற்பனை முகவர்கள், பொறியாளர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள், விமான நிலைய சேவை முகவர்கள், மூத்த பராமரிப்பு தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பலர் உட்பட 100-க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப ஆட்சேர்ப்பு செய்கிறது.
மேலும் அதன் துணை நிறுவனங்களான dnata, Emirates Holidays, Emirates SkyCargo மற்றும் Arabian Adventures போன்றவற்றுக்கு, மூத்த நிர்வாகிகள், பயண ஆலோசகர், மூத்த மேலாளர் மற்றும் தலைமை கட்டிடக் கலைஞர், சரக்கு கையாளுதல் மேற்பார்வையாளர், தொழில்நுட்ப மேலாளர், மூத்த சரக்கு விற்பனை நிர்வாகி போன்ற பதவிகளுக்கான நேர்காணலை அறிவித்துள்ளது.
இதேபோல், அபுதாபியை தளமாகக் கொண்ட தேசிய விமான நிறுவனமான எதிஹாட் ஏர்வேஸ் தனது கேபின் க்ரூ, உணவு பாதுகாப்பு தணிக்கை அதிகாரி, நெட்வொர்க் மேம்பாட்டு மேலாளர், ஏர்சைட் பாதுகாப்பு அதிகாரி, மேலாளர் வழி லாபம், ஃபோர்க்லிஃப்ட் ஆபரேட்டர் மற்றும் பழுதுபார்க்கும் அதிகாரி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட வேலைகளை பட்டியலிட்டுள்ளது.
அந்தந்த நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் மேற்குறிய வேலைகளுக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.