UAE Tamil Web

அமீரக தேசிய தினம் : பெயர் மாறிய எதிசலாட் மற்றும் டூ..!

Mobile

அமீரக தொலைத்தொடர்பு சேவை வழங்கு நிறுவனங்களான எதிசலாட் மற்றும் டூ அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு தங்களது பெயர்களை மாற்றியுள்ளன.

- Advertisment -

எதிசலாட் நிறுவனம் தங்களது பெயரை UAE49 எதிசலாட் (UAE49 ETISALAT) எனவும் டூ தங்களது பெயரை நேஷனல்டே-டூ (NationalDay-du) எனவும் மாற்றியிருக்கின்றன.

அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு டூ நிறுவனம் தங்களது ஏமிராட்டி வாடிக்கையாளர்களுக்கு 49 GB இலவச டேட்டாவை வழங்குவதாக நேற்று தெரிவித்திருந்தது.

நவம்பர் 30 ஆம் தேதி முதல் டிசம்பர் 3, 2020 ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களில் *055*49# என்ற எண்ணிற்கு டயல் செய்து இலவச டேட்டாவைப் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.