35.4 C
Dubai
May 25, 2020
UAE Tamil Web

அமீரக வாகன ஓட்டிகளுக்கு ஓர் நற்செய்தி. போக்குவரத்து அபராதத்தில் 50% தள்ளுபடி!

DUBAI TRAFFIC

“அனைத்து கருப்பு புள்ளிகளும் (BLACK POINTS) ரத்து செய்யப்படும், மேலும் வாகனத் தண்டனையின் அபராதமும் தள்ளுபடி செய்யப்படும்.”

48 வது ஐக்கிய அரபு அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு, அமீரகத்தில் பதிவு செய்யப்பட்ட அனைத்து போக்குவரத்து அபராதங்களுக்கும் 50 சதவீதம் தள்ளுபடி அறிவித்துள்ளது, புஜைரா காவல்துறை.

இந்த தள்ளுபடி, புஜைராவின் இளவரசர் ஷேக் முகமது பின் ஹமாத் பின் முகமது அல் ஷர்கியின் உத்தரவுகளுக்கு இணங்க, நவம்பர் 30 க்கு முன்னர் புஜைரா அமீரகத்தின் சாலைகளில் பதிவு செய்யப்பட்ட அனைத்து போக்குவரத்து மீறல்களையும் உள்ளடக்குகிறது என்று அவர்கள் சுட்டிக்காட்டினர்.

CROWN PRINCE OF FUJJAIRAH
CROWN PRINCE OF FUJAIRAH

“தள்ளுபடி அபராதம் டிசம்பர் 2 முதல் பிப்ரவரி 2 வரையிலும் செலுத்தலாம்.”

“இந்த நடவடிக்கை வாகன ஓட்டிகளை தங்கள் வாகன அபராத சுமைகளை அழிக்க ஊக்குவிப்பதற்கும், பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பதற்கும், 48 வது ஐக்கிய அரபு எமிரேட் தேசிய தின கொண்டாட்டங்களின் நல்ல சந்தர்ப்பத்தை பகிர்ந்து கொள்வதற்கும் நோக்கமாக உள்ளது.”

“புஜைரா காவல்துறை அதன் அனைத்து காவல் நிலையங்களிலும் மற்றும் இன்னும் பிற முறைகள் மூலமாகவும், பொதுமக்கள் அபராதம் செலுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யும்.” என்று கூறியுள்ளது.

மற்ற சில பதிவுகள்