நேற்று அமீரகத்தின் 50 வது தேசிய தினம் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு வான வேடிக்கைகள், சூப்பர் கார்களின் பிரம்மாண்ட அணிவகுப்பு என அமீரகமே விழாக்கோலம் பூண்டது.
இது ஒருபுறமிருக்க துபாயில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் அமீரக தேசிய தினத்தை வித்தியாசமாக கொண்டாடியிருக்கிறது. ஜெபல் அலியில் உள்ள GBH International Contracting LLC நிறுவனத்தின் தொழிலாளர்களுடன் துணைத் தூதரக அதிகாரிகள் இணைந்து தேசிய தினத்தைக் கொண்டாடியிருக்கிறார்கள். இந்திய மக்கள் அமைப்பின் துபாய் பிரிவு ஒருங்கிணைத்த இந்த நிகழ்ச்சியில் சில அமீரக அரசு அதிகாரிகளும் பங்குபெற்றனர்.
Indian People’s Forum, Dubai Chapter in association with @cgidubai celebrated #UAENationalDay with the Indian Blue Collar workers of GBH International Contracting LLC, Jabel Ali on Dec 2, 2021.#UAENationalDay50 #AmritMahotsav pic.twitter.com/5Hu0ZHQHIN
— India in Dubai (@cgidubai) December 3, 2021