UAE Tamil Web

அமீரக தேசிய தினம்: இந்த தவறுகளைச் செய்தால் 2000 திர்ஹம்ஸ் அபராதம் – காவல்துறை எச்சரிக்கை..!

UAE National Day

அமீரகத்தின் 49 வது தேசிய தினம் டிசம்பர் 2 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதனையடுத்து டிசம்பர் 1 – 5 ஆம் தேதிவரையில் விடுமுறைகள் வர இருக்கின்றன.

- Advertisment -

இந்நிலையில் அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு கொரோனா முன்னெச்சரிக்கை/ கட்டுப்பாடுகளை அபுதாபி காவல்துறை அறிவித்திருக்கிறது.

  • மக்கள் பொது இடங்களில் கூடுதல் கூடாது.
  • ஆபத்தான முறையில் வாகனங்களை இயக்கினால் 2000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும். மேலும் 12 கரும்புள்ளிகள் உரிமத்தில் சேர்க்கப்படும்.
  • சாலைகளில் ரேஸில் ஈடுபட்டால் வாகனம் 30 நாட்களுக்கு சிறைபிடிக்கப்படும்.
  • ஒலி மாசுபாடு ஏற்படுத்தும் விதமாக வாகனங்களை இயக்குபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். வாகனத்தின் வேகத்தை அதிகரிக்கும் நோக்கத்தோடு அல்லது ஒலியின் அளவை அதிகரிக்கும் நோக்கத்தோடு என்ஜினை பழுதுபார்த்தல் தடை செய்யப்பட்டுள்ளது.
  • வாகனங்களில் செய்யப்படும் அலங்காரங்களை நவம்பர் 25 முதல் டிசம்பர் 6 ஆம் தேதிவரையில் மட்டுமே வைத்துக்கொள்ளலாம் என காவல்துறை தெரிவித்திருக்கிறது.
  • ஒரு காருக்கு 3 பேர் மட்டுமே செல்லவேண்டும். அனைத்து நேரங்களிலும் டிரைவர் உள்ளிட்ட அனைவரும் முகக்கவசம் அணிதல் வேண்டும்.
  • அனைவரும் கட்டாயம் சீட்பெல்ட் அணிதல் வேண்டும்.
  • காரின் ஜன்னலில் அமர்தல் அல்லது காரின் கூரைப்பகுதியில் ஏறி நிற்பது ஆகியவை கூடாது.
  • வாகனத்தின் நம்பர் பிளேட்டை (முன் மற்றும் பின்புறம்) மறைத்தல் கூடாது.
  • பொதுச் சொத்துக்கள் மீது ஸ்னோ ஸ்ப்ரே அல்லது சில்லி ஸ்ட்ரிங் (Silly String) -ஐ உபயோகித்தல் கூடாது.
  • போக்குவரத்தை தடை செய்யும் விதமாக வாகனங்களை இயங்குதல் கூடாது. அங்கீகரிக்கப்படாத இடங்களில் வாகனங்களை பார்க்கிங் செய்யக்கூடாது.
  • பொறுப்பிலாமல் வாகனங்களை இயக்கவோ சாகச செயல்களில் ஈடுபடவோ கூடாது.
  • காரின் விண்ட்ஷீல்டு மற்றும் நம்பர் பிளேட்களை அமீரக கொடியை வைத்து மூடுதல் கூடாது.