UAE Tamil Web

6 கண்டங்களில் களை கட்டிய 49-வது அமீரக தேசிய தினம்.. உற்சாகமுடன் கொண்டாடிய எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்.!(புகைப்படங்கள் உள்ளே)

ND

எமிரேட்ஸ் ஏர்லைன் 49-வது அமீரக தேசிய தினத்தை ஆறு கண்டங்களில் கொண்டாடியது. எமிரேட்ஸ் ஏர்லைன் தற்போது உலகம் முழுவதுமுள்ள 99 இடங்களுக்கு சேவைகளை வழங்கி வருகிறது.

- Advertisment -

12

அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு எமிரேட்ஸ் விமான நிறுவனத்தால் தொடங்கப்பட்ட பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக ஆறு கண்டங்களில் அமீரக கொடிகள் பெருமிதத்துடன் பறந்தன. 49-வது அமீரக தேசிய தினத்தை குறிக்கும் வகையில் உலகம் முழுவதும் அனைத்து வடிவங்களிலும், அளவிலும் அமீரக கொடிகள் அசைக்கப்பட்டு உலக அரங்கில் பலரது கவனத்தை ஈர்த்தது.

34

6 கண்டங்களில் உள்ள எமிரேட்ஸ் நிறுவனத்தின் ஊழியர்களால் அமீரக தேசிய தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டது. கொண்டாட்ட நிகழ்வுகளின் போது எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் அமீரக தேசிய கொடிகளை தங்கள் கைகளில் ஏந்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

56

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்ற எமிரேட்ஸ் நிறுவன தேசிய தின கொண்டாட்டங்களில் பங்கேற்ற எமிரேட்ஸ் விமான நிறுவன செயல்பாட்டு ஊழியர்களும் , விமானத்தின் முன் நின்று தங்கள் கைகளில் அமீரக கொடிகளை ஏந்தி கொண்டு ‘49’ என்ற எண்ணை உருவாக்கினர்.

78

வியன்னா, பஹ்ரைன், அக்ரா, மணிலா, பிரேசிலின் மிக பெரிய நகரமான சாவோ பாவுலோ, சிகாகோ, சூரிக், ஜெனீவா உள்ளிட்ட இடங்களில் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் சார்பாக அதன் ஊழியர்கள் 49-வது அமீரக தேசிய தினத்தை உற்சாகமுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

Emirates celebrates the spirit of the 49th UAE National Day across six continents.

Posted by Emirates on Tuesday, December 1, 2020

போக்குவரத்து, சுற்றுலா மற்றும் வர்த்தக மையமாக உலக அரங்கில் அமீரகம் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தில் உள்ளது என்பதை இந்த காட்சிகள் உறுதிப்படுத்தின.