UAE Tamil Web

“தேசத்தின் பாதுகாப்பே முதன்மையானது” – பச்சிளங்குழந்தையைப் பிரிந்து பணிக்குத் திரும்பிய பெண் டாக்டர்..!

Emirati Doctor

அமீரகத்தில் கொரோனா உச்சத்தில் இருந்த சமயம் டாக்டர்.லோல்வா அகமது அல் அலி (Lolwa Ahmed Al Ali) அவர்களுக்கு அப்போதுதான் பிரசவம் நடைபெற்று ஆண் குழந்தை பிறந்திருந்தது. மருத்துவத் துறை தீவிர முனைப்போடு இருந்த நேரம் என்பதாலும், மருத்துவர்களின் தேவை அதிகம் இருந்ததாலும் தானும் பணியில் இணைய சம்மதித்திருக்கிறார் அல் அலி.

- Advertisment -

அபுதாபியில் உள்ள அல் ஃபாலா மற்றும் அல் சம்ஹா ஆகிய சுகாதார நிறுவனங்களின் மருத்துவ மேலாளராக அல் அலி இருந்தார். அபுதாபி சுகாதார நிறுவனமான சேஹாவின் கட்டுப்பாட்டில் அல் மஸௌதி பகுதியில் இயங்கும் ட்ரைவ் – த்ரூ பரிசோதனை மையத்தில் கள மேலாளராகவும் அல் அலி இருந்திருக்கிறார். மேலும், கொரோனா தடுப்பூசி பரிசோதனைக்கான கள மேலாளராகவும் இவர் பணியாற்றி வருகிறார்.

“என்னுடன் பணியாற்றிய பலரும் தங்களது குழந்தைகளை விட்டுவிட்டு சக சுகாதாரப் பணியாளர்களுடன் ஹோட்டலில் தங்கியிருக்கிறார்கள். எங்களுக்கு தேசத்தின் பாதுகாப்பும் ஆரோக்கியமே முக்கியம்” எனச் சொல்கிறார் அல் அலி.

அமீரக தலைவர்கள் அளித்த உத்வேகம்

“நீண்டநேரம் கவச உடைகள் அணிதல், மன அழுத்தம், வேலைப்பளு என உடலும் மனதும் தளர்ந்து போகும்போது எங்களைத் தேற்றியவர்கள் அமீரக தலைவர்கள் தான்” என அல் அலி தெரிவித்தார்.

“அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வந்தார். பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து எம்மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றது எப்படி இந்த சூழலில் இருந்து வெளியேறி அமீரகத்தை வளமான பாதைக்கு அழைத்துச்செல்வது குறித்து நீண்டநேரம் பேசுவார்” என அல் அலி குறிப்பிட்டார்.

“அவருடைய நம்பிக்கை தரும் வார்த்தைகளிலேயே எனக்கு அதிகம் பிடித்தது ,” அமீரகத்தில் மருந்துப் பொருட்களும் உணவும் என்றென்றும் மிக மிக முக்கியமான பொருட்களாக பார்க்கப்படும். கவலை வேண்டாம்” என்பதுதான். எங்களுக்கு உத்வேகத்தை அளித்து நாட்டு மக்களின் பாதுகாப்பிற்கும் ஆரோக்கியத்திற்கும் எங்களைத் துணிந்து போராட வைத்தார்” என அல் அலி குறிப்பிட்டார்.