அமீரகத்தில் புதிய வடிவிலான 50 திர்ஹம்ஸ் நோட்டுகள் புழக்கத்திற்கு வர உள்ளன. இப்புதிய நோட்டில் அமீரகத்தின் தந்தை ஷேக் சயீத் உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் அமீரகத்தில் உள்ள முக்கிய இடங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

விரைவில், அமீரக வங்கிகள் மற்றும் ATM களில் இப்புதிய நோட்டுகள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
View this post on Instagram
அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் பிற எமிரேட்களின் ஆட்சியாளர்கள் ஆகியோர் இந்தப் புதிய நோட்டுகள் அறிமுக நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
المصرف المركزي يكشف الخصائص الأمنية والفنية للإصدار الجديد المصنوع من مادة “البوليمر” لتعزيز ثقة المتعاملين.#وام
— وكالة أنباء الإمارات (@wamnews) December 7, 2021