UAE Tamil Web

2020 ஆம் ஆண்டிற்கான அமீரகத்தின் டாப் 10 சாதனைகள்..!

flag UAE

உலகமே கொரோனாவின் தாக்கத்தால் கட்டுண்டு இருக்கையில் அமீரகம் இந்தாண்டு பல்வேறு துறைகளில் பல்வேறு வகையிலான சாதனைகளை செய்திருக்கிறது. 2020 ஆம் ஆண்டிற்கான அமீரகத்தின் டாப் 10 சாதனைகளை கீழே காணலாம்.

- Advertisment -

1. விண்வெளி மற்றும் அறிவியல்

செவ்வாய் கிரகத்திற்கு ஹோப் விண்கலத்தை ஏவியது, நிலவிற்கான புதிய விண்வெளித் திட்டத்தை அறிவித்தது என உலகத்தை அமீரகம் திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறது.

பிப்ரவரி 9, 2021 ஆம் தேதி 19:42 மணிக்கு அரபு உலகின் செவ்வாய் கிரகத்திற்கான முதல் விண்கலமான ஹோப் செவ்வாய் கிரகத்தை அடையும்.

கடந்த அக்டோபர் மாதம் அமீரக அரசு MBZ-Sat திட்டத்தை அறிவித்தது. கலீஃபா செயற்கைக்கோளிற்குப் பிறகு அமீரக பொறியாளர்களால் தயாரிக்கப்படும் செயற்கைக்கோள் MBZ-Sat தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Image Credit: khaleejtimes

2. ஆற்றல்

பராக்கா அணுமின் நிலையத்தின் முதல் ரியாக்டர் சுற்றுச்சூழலைப் பாதிக்காதவண்ணம் மின்சாரத்தைத் தயாரித்ததன் மூலம் அணுமின் நிலையங்களை வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் அமீரகம் இணைந்துள்ளது.

நவம்பர் 18, 2020 ஆம் தேதி ரியாக்டர் தனது திறனில் 80 சதவீத மின்சார உற்பத்தியை மேற்கொண்டு திட்டத்தை வெற்றிபெறச் செய்தது.

இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் கிடைக்கும் புதிய இடங்களைக் கண்டுபிடித்ததும் இவ்வருடத்திற்கான சாதனைகளாகப் பார்க்கப்படுகிறது.

Barakah Nuclear Energy Plant
Image Credit: KhaleejTimes

3.கொரோனாவிற்கு எதிரான போர்

கொரோனாவிற்கு எதிரான போரில் மனிதாபிமான அடிப்படையில் சுமார் 120 நாடுகளுக்குத் தேவையான மருந்து மற்றும் அடிப்படைத் தேவைகளை அமீரகம் வழங்கியிருக்கிறது. அத்தோடு, உலகளவில் சிறப்பாக கொரோனா முன்னெச்சரிக்கைகளை கடைபிடிக்கும் நாடு எனவும் அமீரகம் பெயர்பெற்றுள்ளது.

Coronavirus PCR test
Image Credit : alamy.com/ae

4.ஆப்ரஹாம் அமைதி ஒப்பந்தம்

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் அமைதி நிலவவும் புதிய பொருளாதார வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுக்கவும் அமீரகம் இஸ்ரேல் உடனான அமைதி (ஆப்ரஹாம்) ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. வரலாற்றின் மிக முக்கியமான இந்த ஆப்ரகாம் ஒப்பந்தம் மூலமாக நெடுநாள் பகை நாடுகளாக இருந்த இஸ்ரேலும் அமீரகம் தற்போது இருநாடுகளுக்கிடையேயான  ராஜாங்க உறவுகளை வலுப்படுத்தி வருகின்றன.

uae israel
Image Credit : emiratesleaks

5.தொழில்துறை

சுவிட்சர்லாந்தின் லொசேன் நகரில் உள்ள ஐஎம்டி பிசினஸ் ஸ்கூல் வெளியிட்ட 2020 ஆம் ஆண்டிற்கான உலக போட்டி ஆண்டு அறிக்கையில் அமீரகம், மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க நாடுகளை வழிநடத்தியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகளாவிய போட்டித்தன்மையில் ஐக்கிய அரபு அமீரகம் உலகில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

dubai
Image Credit: Insta Dubai Visa

6. வங்கிச் சேவை

உலகளாவிய வங்கி சேவை குறித்த அறிக்கையில் உள்ள மொத்த 338 குறியீடுகளில் ஐக்கிய அரபு அமீரகம் 23 குறியீடுகளில் உலகின் முதல் இடத்தையும், 59 குறியீடுகளில் உலகின் முதல் ஐந்து நாடுகளிலும் ஒன்றாகவும், 106 குறியீடுகளில் உலகின் முதல் 10 நாடுகளிலும் ஒன்றாகவும் தேர்வாகியுள்ளது.

bank
Image Credits- Khaleej Times

7.கல்வி

அமீரக தொலைதொடர்பு மற்றும் இணைய நெட்வொர்க்குகளின் மேம்பட்ட உள்கட்டமைப்பானது பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை தொலைதூரக் கற்றலை சாத்தியமாக்க உதவியது. அதுமட்டுமல்லாமல் பல பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் தொலைதூர வேலை முறைகளை விரைவாக பின்பற்ற அனுமதித்தது.

Dubai schools
Image Credit : khaleejtimes

8. சமமான ஊதியம்

தொழிலாளர் உறவுகளை ஒழுங்குபடுத்துவதில் 1980 இன் பெடரல் சட்டம் எண் 08 இன் சில விதிகளை திருத்தும் நோக்கில் 2020 ஆம் ஆண்டின் பெடரல் சட்டம் எண் 6 இயற்றப்பட்டது. 2020 இல் வெளியிடப்பட்ட முக்கிய சட்டங்களில் இதுவும் ஒன்றாகும். இது ஆண்களுக்கான அதே பணியை பெண்களும் செய்யும்பட்சத்தில் பெண் தொழிலாளர்களுக்கு ஆண் தொழிலாளர்களுக்கு சமமான ஊதியத்தை வழங்கிட வகை செய்கிறது.

women worker
Image Credit: KhaleejTimes

9. எண்ணெய் மற்றும் எரிவாயு

இந்தாண்டு நவம்பர் மாதம், சுப்ரீம் பெட்ரோலியம் கவுன்சில் (SPC) கணிசமான மீட்டெடுக்கும் வழக்கத்திற்கு மாறான கடலோர எண்ணெய் வளங்களைக் கண்டுபிடித்தது. இந்த இடத்தில் இருந்து 22 பில்லியன் பேரல்கள் (stock tank barrels) எண்ணெய் எடுக்க முடியும். அபுதாபியின் வழக்கமான எண்ணெய் கையிருப்பான 2 பில்லியன் பேரல்கள் இந்த புதிய கண்டுபிடிப்பினால் உயரும்.

Oil and Gas
Image Credit: KhaleejTimes

10.விளையாட்டு

கொரோனா நோய்த் தாக்கம் ஒருபுறமிருந்தாலும் தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பல விளையாட்டுப் போட்டிகளை தெளிவான திட்டத்துடன் அமீரகம் நிறைவேற்றிக்காட்டியது.

இந்தவருடம் அமீரகத்தில் அமீரக MMA வாரியர்ஸ் ஃபைட்டிங் சேம்பியன்ஷிப் (UAE Warriors MMA Fighting Championship), ஐபிஎல், UFC ரிட்டன்ஸ் டூ ஃபைட் ஐஸ்லேண்ட் (UFC Returns to Fight Island) ஆகிய போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெற்றன.

IPL_
Image Credit : Gulf News