ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய தினத்தை முன்னிட்டு பரவிவரும் மோசடி செய்தி..!

UAE National Day WhatsApp scam warning issued

ஐக்கிய அரபு அமீரகத்தின், (டிசம்பர் 2) 48வது தேசிய தினத்தை முன்னிட்டு வாட்ஸ்அப்பில் சில மோசடி செய்திகள் வலம்வருவதாக TRA எச்சரித்துள்ளது.

அதில் குறிப்பாக இந்த விழா தருணங்களில் பரிசுகள் குறித்த ஆன்லைன் மோசடி செய்திகளை நம்பவேண்டாம், என்று தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRA) பொதுமக்களை எச்சரித்துள்ளது.

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்; சமீபத்திய இந்த ஆன்லைன் மோசடி குறிப்பாக அமீரகவாசிகளை குறிவைக்கிறது, ஒரு கிளிக் செய்தால் பயனரின் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தையும் திருடும் அளவிற்கு ஒரு போலியான “பரிசு வெல்லலாம்” இணைப்பைக் கொண்ட பொய்யான தகவல் வாட்ஸ்அப்பில் பரவி வருவதாக கூறியுள்ளது.

இதுபோன்ற போலியான செய்திகளைப் புறக்கணித்து பாதுகாப்பாக இருக்குமாறு நாட்டில் உள்ள அனைவரையும் ஆணையம் வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளது.

Loading...