UAE Tamil Web

அமீரகம்: ரமலானில் மசூதிகளுக்கு புதிய விதிமுறைகளை அறிவித்த NCEMA

அமீரகத்தில் ரமலான் மாதம் துவங்கவுள்ள நிலையில் அதற்கான பின்பற்றவேண்டிய கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை அறிவிப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பால் அமீரகத்தில் தொடர்ந்து 2 ஆண்டுகளாக ரமலான் மாதம் மொழிவிழந்து காணப்பட்டது.

தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ளதால் அமீரகத்தில் விதிக்கப்பட்ட முக்கிய கட்டுப்பாடுகள் தளர்த்தப்படடன. முன்னதாக அமீரகத்தில் இஃப்தார் பந்தல் அமைத்துக்கொள்ள அனுமதிஅளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது தேசிய அவசரகால நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையமான (NCEMA) மசூதிக்குள்ளான பாதுகாப்பு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.

  • மசூதிகளில் வழிபாடு செய்பவர்களுக்கு கேன் தண்ணீர் விநியோகிக்கலாம். கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக கடந்த 2 வருட ரமலானில் இது நிறுத்தப்பட்டிருந்தது.
  • ரமலான் மாதம் முழுவதும் மசூதிகளில் தராவீஹ் தொழுகைகள் நடத்தலாம். மேலும் கடைசி 10 நாட்களில் தஹஜ்ஜுத் தொழுகை நடத்த அனுமதியும் உண்டு.
  • தராவீஹ் மற்றும் தஹஜ்ஜுத் உள்ளிட்ட தொழுகைகளை நிறைவேற்றும் போது வழிபாட்டாளர்கள் ஒரு மீட்டர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
  • இஷாவிற்கான தொழுகைக்கான பாங்கு அழைப்பு மற்றும் இகாமத் இடையே 20 நிமிடங்கள் இடைவெளி இருக்கும்.
  • மசூதிகளில் இஷா மற்றும் தராவீஹ் தொழுகைகளை நிறைவேற்றுவதற்கான மொத்த கால அளவு 45 நிமிடங்களாகும்.
  • இஷா தொழுகை முடிந்த உடனேயே தராவீஹ் தொழுகை தொடங்கும்.
  • தஹஜ்ஜுத் தொழுகையின் நேரம் 45 நிமிடங்கள் ஆகும்.
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap