UAE Tamil Web

அமீரகத்தில் ஆகஸ்டு 1 முதல் வருகிறது புதிய கொரோனா விதிமுறை – கவனம் மக்களே..!

Stock-PCR-test-for-Covid19-

ஆகஸ்டு 1 ஆம் தேதிமுதல் பெடரல் அரசு அலுவலகங்கள் மற்றும் அமைச்சகங்களுக்கு வருவோர் கண்டிப்பாக தடுப்பூசி எடுத்திருக்க வேண்டும் எனவும் தடுப்பூசி எடுக்காதவர்கள் 48 மணிநேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட PCR பரிசோதனை சான்றிதழை வைத்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதவளத் துறைக்கான பெடரல் ஆணையம் (FAHR) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வாடிக்கையாளர்கள், பார்வையாளர்கள், அவுட்சோர்சிங் அல்லது சேவை நிறுவனங்களின் ஊழியர்கள் அல்லது அரசு ஊழியர்களைத் தவிர அனைவருக்கும் இந்த விதிமுறைகள் பொருந்தும் என FAHR தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இந்தப் புதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையின்படி, அரசு அலுவலகங்கள் மற்றும் அமைச்சகங்களுக்கு வருபவர்கள் கீழ்கண்ட விதிமுறைகளைப் பின்பற்றவேண்டும்.

  • கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்திருக்கவேண்டும்.
  • தடுப்பூசி எடுக்கவில்லை எனில், தங்களது வருகைக்கு முன்னர் 48 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட PCR நெகட்டிவ் சான்றிதழை வைத்திருத்தல் வேண்டும்.
  • தடுப்பூசி எடுத்துக்கொள்ள தகுதிபெறாதவர்கள் அதற்கான சான்றிதழுடன் நெகட்டிவ் PCR சான்றிதழையும் வைத்திருக்கவேண்டும்.
  • 16 வயதிற்குட்பட்டவர்களுக்கு இந்த நடைமுறையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Stock-PCR-test-for-Covid19-
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap