அமீரகத்தில் Dh 2 பில்லியன் மதிப்பிலான Dubai-Al Ain சாலை மேம்பாட்டுத் திட்டம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை அந்த சாலை திறக்கப்பட்டது. இந்த மேன்படுத்துதல் பணி மூலம் பயணிகளின் பயணம் நேரம் 50 சதவிகிதம் குறையும் என்று கூறப்படுகிறது.
சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) கூற்றுப்படி, துபாய்-அல் ஐன் சாலையில் ராஸ் அல் கோர் சாலை சந்திப்பிலிருந்து, எமிரேட்ஸ் சாலை வரையிலான பயண நேரம் 16 நிமிடங்களில் இருந்து 8ஆகக் குறையும் என்று கூறியுள்ளது.
மேலும், சில சமயங்களில் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை நீடித்து நிற்கும் போக்குவரத்து நெரிசலை இது தீர்க்கும் என்றும் RTA தெரிவித்துள்ளது.
சாலை ஒவ்வொரு திசையிலும் மூன்றில் இருந்து ஆறு வழிச்சாலையாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது, மேலும் இந்த திட்டத்தில் ஆறு முக்கிய Interchanges, பாலங்கள் மற்றும் 11.5 கிமீ நீளமுள்ள Ramps ஆகியவை அடங்கும். ஏற்கனவே இறுதிசையிலும் ஒரு மணி நேரத்திற்கு 12,000 வாகனங்களை கையாண்ட இந்த சாலை தற்போது மணிக்கு 24,000 வாகனங்களை கையாளும் அளவிற்கு upgrade செய்யப்பட்டுள்ளது.
துபாய் பட்டத்து இளவரசரும், நிர்வாக கவுன்சிலின் தலைவருமான மதிப்பிற்குரிய ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் இந்த சாலையை திறந்து வைத்தார்.
இந்த சாலையின் இருபுறமும் வசிக்கும் அல்லது வேலை செய்யும் சுமார் 1.5 மில்லியன் மக்கள் இதன் மூலம் பயனடைவார்கள். மேலும் இந்த சாலை 25 பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கும் தனது சேவையை வழங்குகிறது, இதன் மூலம் சுமார் 27,000 மாணவர்கள் பயனடைவர்.