UAE Tamil Web

முக்கியச் செய்தி: அமீரகத்தில் தொழிலாளர்களுக்கு இனி துன்பங்கள் இருக்காது ; வெளியிடப்பட்ட புதிய தொழிலாளர் பாதுகாப்புச் சட்டம்..!

workers

அமீரக மனிதவள மேம்பாடு மற்றும் எமிராட்டிசேஷன் அமைச்சர் டாக்டர் அப்துல் ரஹ்மான் அல் அவார் இன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் அடுத்தாண்டு புதிய தொழிலாளர் பாதுகாப்புச் சட்டம் அமலுக்கு வரும் எனவும் அதற்கான அரசாணை 2021 (33) வெளியிடப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இந்தச் சட்டம் பிப்ரவரி 2, 2022 ஆம் தேதிமுதல் அமீரகத்தில் நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் உறவுகளை நெகிழ்வுத் தன்மையுடையதாக மாற்ற இச்சட்டம் துணை புரியும் என அப்துல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தாக்குதல், துன்புறுத்துதல் ஆகியவற்றிலிருந்து தொழிலாளர்களைப் பாதுகாக்க இச்சட்டம் நிச்சயம் வழிவகுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சட்டத்திற்குப் புறம்பாக ஆவணங்களை கையகப்படுத்துதலையும் இதன்மூலம் கட்டுப்படுத்த முடியும் என அப்துல் பேசுகையில் குறிப்பிட்டார்.

workers
13 Shares
Share via
Copy link