UAE Tamil Web

ஆங்கிலப் புத்தாண்டு : அமீரகத்தில் தனியார் தொழிலாளர்களுக்கு 2 நாள் விடுமுறை அறிவிப்பு..!

new year

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, அமீரகத்தில் உள்ள தனியார் தொழிலாளர்களுக்கு வரும் ஜனவரி 1 ஆம் தேதி (சனிக்கிழமை) விடுமுறை அளிக்கப்படும் என மனிதவள மேம்பாடு மற்றும் எமிராட்டிசேஷன் அமைச்சகம் அறிவித்துள்ளது.

டிசம்பர் 31 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை (தற்போதைய நிலவரப்படி) வார விடுமுறை என்பதால் தொழிலாளர்களுக்கு 2 நாட்கள் விடுமுறை கிடைக்க இருக்கிறது.

முன்னதாக அமீரக அரசு ஊழியர்களுக்கு ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு அமீரக அரசு மனிதவள மேம்பாட்டிற்கான பெடரல் ஆணையம் விடுமுறை அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

new year
5 Shares
Share via
Copy link