இந்த வார அபுதாபி பிக்டிக்கேட்டில் இந்தியாவைச் சேர்ந்த 33 வயது பிஜேஷ் போஸ் அவர்களுக்கு 10 லட்சம் திர்ஹம்ஸ் பரிசு கிடைத்திருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்னால் தான் போஸிற்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்துள்ளனர்.
மருத்துவமனையிலிருந்து மதிய சாப்பாட்டிற்காக வெளியே வந்த போஸிற்கு கால் செய்த பிக் டிக்கெட் நிர்வாக அதிகாரி அதிர்ஷ்டத் தகவலை அவரிடத்தில் தெரிவித்திருக்கிறார். இதனால் செய்வதறியாது திகைத்த போஸ்,” என்னுடைய மகள்கள் பிறந்த நேரம் என்னை கோடீஸ்வரனாக்கியிருக்கிறது. பரிசுப் பணத்தைக் கொண்டு என்ன செய்வதென்று இன்னும் முடிவெடுக்கவில்லை. ஆனால், நிச்சயம் கஷ்டப்படும் மக்களுக்கு உதவுவேன்” என்றார்.
துபாயில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் கணக்காளராகப் பணிபுரிந்துவரும் போஸ் இந்தப் பரிசுத் தொகையை 14 பேருடன் பகிர்ந்துகொள்ள இருக்கிறார்.