UAE Tamil Web

ICA ஸ்மார்ட் அப்ளிகேஷன் மூலமாகவே இனி கோல்டன் விசாவிற்கு விண்ணப்பிக்கலாம்..!

Golden Visa

குறிப்பிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு 10 வருடத்திற்கான அமீரகத்தின் கோல்டன் விசா வழங்கப்படுகிறது. இந்நிலையில் இனி, ICA வின் ஸ்மார்ட் அப்ளிகேஷன் மூலமாகவே கோல்டன் விசாவிற்கு விண்ணப்பிக்கலாம் என அமீரக அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையம் (ICA) தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

தமக்கு அல்லது பிறருக்காக கோல்டன் விசா வேண்டி விண்ணப்பிப்போர் ICA ஸ்மார்ட் அப்ளிகேஷனுக்குள் சென்று உரிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்கலாம். இந்த சேவைக்கு நபர் ஒருவருக்கு 50 திர்ஹம்ஸ் கட்டணமாக வசூலிக்கப்படும் என ICA தெரிவித்துள்ளது.

விண்ணப்பங்கள் சம்பத்தப்பட்ட அதிகாரிகளிடத்தில் அனுப்பிவைக்கப்படும் எனவும் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் பயனாளிக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் அனுப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள தகவல்களில் தவறு இருந்தாலோ அல்லது வேண்டிய ஆவணங்கள் இணைக்கப்படாமல் இருந்தாலோ அடுத்த 30 நாட்களுக்குள் விண்ணப்பம் தாமாகவே காலாவதியாகிவிடும் என RTA தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

அமீரகத்தின் கோல்டன் விசாவைப் பெற நீங்கள் தகுதியானவரா என்பதைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Golden Visa
0 Shares
Share via
Copy link