UAE Tamil Web

கோல்டன் விசா Update.. இன்ப அதிர்ச்சி கொடுத்த அமீரகம் – மகிழ்ச்சி கடலில் மூழ்கிய UAE செவிலியர்கள்

அமீரகம் மட்டுமல்ல உலக அளவில் உள்ள அனைத்து நாடுகளிலும் இந்த பெருந்தொற்று காலத்தில் செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் தான் ரியல் ஹீரோக்களாக வலம்வருகின்றனர். இந்நிலையில் Emirates IDயின் இரண்டு வருட செல்லுபடியாகும் காலம் தற்போது அவர்களுக்கு 10 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டதைக் கண்டு தற்போது பல செவிலியர்கள் ஆனந்தத்தில் மூழ்கியுள்ளனர்.

மதிப்புமிக்க கோல்டன் விசாவைப் பெறுவது அவர்களின் வாழ்வில் மறக்க முடியாத மற்றும் நேசத்துக்குரிய தருணமாகிவிட்டது என்றே கூறலாம். கடந்த ஆண்டு நவம்பரில், முன்கள பணியாளர்களுக்கும் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு கோல்டன் விசா வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அமீரகத்தின் VPS ஹெல்த்கேரின் தலைமை நர்சிங் அதிகாரியான ராணி எல்சா உம்மன், Federal Authority for Identity and Citizenship செயலியில் தனக்கான 10 வருட விசா நிலையைப் பார்த்து மிகவும் உணர்ச்சிவசப்பட்டதாக பிரபல ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

Qusais, ஆஸ்டர் மருத்துவமனையில் உதவி தலைமை நர்சிங் அதிகாரியான ஸ்மிதா அலியாஸ் மூலன், தனது விசா 10 ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளதை கண்டு தான் உற்சாகமடைந்துள்ளதாக கூறியுள்ளார். “என்னால் இப்போது கூட நம்ப முடியவில்லை”, “நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், அமீரகத்தில் ஒரு செவிலியராக வளர்ந்ததால் பெருமைகொள்கிறேன் என்றார்.

தங்கள் உயிரையும் பொறுப்படுத்தாமல் பிறர் உயிர் காத்த நமது செவிலியர்களுக்கு அமீரக அரசு இந்த பெருமையை அளித்துள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap