39.2 C
Dubai
September 22, 2020
UAE Tamil Web

கொரோனா : பாதுகாப்பான 100 நாடுகளின் பட்டியலில் அமீரகத்திற்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

uae rank

கொரோனா நோய் பாதிப்பு உலகம் முழுவதும் பரவிவரும் நிலையில் டீப் நாலேட்ஜ் க்ரூப் (Deep Knowledge Group) அமைப்பு பாதுகாப்பான 100 நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் அமீரகம் 11 வது இடத்தைப் பிடித்திருக்கிறது.

பட்டியலில் நியூசிலாந்து, தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு பின்னணியில் அமீரகம் இருந்தாலும் ஹாங்காங் மற்றும் கனடாவிற்கு முன்னால் இடம்பெற்றிருக்கிறது.

வணிகரீதியிலான மற்றும் லாப நோக்கமின்றி இயங்கும் நிறுவனங்களின் குழுமமான Deep Knowledge Group வெளியிட்ட 250 பக்கங்கள் கொண்ட விரிவான ஆவணத்தில் பாதுகாப்பான 100 நாடுகளைப் பட்டியலிட்டுள்ளது. கொரோனா நோய்க்கு எதிரான நாடுகளின் நடவடிக்கைகளைப்பொறுத்து இப்பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

பட்டியலில், அண்டை தேசமான சவூதி அரேபியா 15 ஆம் இடத்திலும், குவைத் 21 ஆம் இடத்திலும், பஹ்ரைன் 23 ஆம் இடத்திலும், ஓமன் 33 ஆம் இடத்திலும் உள்ளன.

தனிமைப்படுத்துதல், கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள், நோய்ப் பரவல் குறித்த தீவிர கண்காணிப்பு, நோய்ப் பரிசோதனை மற்றும் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போன்ற வகைமையில் ஒவ்வொரு நாடும் எப்படி செயல்பட்டிருக்கின்றன என்பதனைப்பொறுத்து பட்டியல் உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஸ்விட்சர்லாந்து மற்றும் ஜெர்மனி முறையே பட்டியலில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களில் உள்ளன. இருநாடுகளின் மிதமான பொருளாதார பின்னடைவு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூர், ஜப்பான், ஆஸ்திரியா, சீனா மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன.

கொரோனா காரணமாக அதிக உயிரிழப்புகளை சந்தித்துவரும் அமேரிக்கா 58 வது இடத்தில் இருக்கிறது. பட்டியலில் ரோமானியாவிற்கு அடுத்ததாகவும் ரஷியாவிற்கு முன்னாலும் அமேரிக்கா உள்ளது. அதிக உயிரிழப்புகளை சந்திக்கும் நாடுகளில் இரண்டாவது இடத்திலிருக்கும் ஐக்கிய ராஜ்ஜியம் பட்டியலில் 68 ஆவது இடத்தில் இருக்கிறது.

சஹாரா கீழமை ஆப்பிரிக்கா (Sub-Saharan Africa) மற்றும் தென் அமேரிக்கா ஆகிய பகுதிகள் மிக ஆபத்தான பகுதிகளாக பட்டியலில் வரையறுக்கப்பட்டுள்ளன. கம்போடியா, லாவோஸ் மற்றும் பஹாமாஸ் ஆகிய நாடுகள் மிகவும் ஆபத்தான மூன்று நாடுகளாக பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!