UAE Tamil Web

அமீரகம்: மொபைல் போன்களுக்கு 50% தள்ளுபடி ; ஆடைகள் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் – 3 நாட்கள் நடைபெற இருக்கும் தள்ளுபடிக் கொண்டாட்டம்..!

Noon-

அமீரகத்தின் பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான நூன், 70 சதவீதம் வரையில் தள்ளுபடி அளிக்கக்கூடிய பிக் எல்லோ சேல் (big yellow sale) திட்டத்தை அறிவித்திருக்கிறது.

ஜூன் 20 – 22 ஆகிய 3 நாட்கள் நடைபெறும் இந்த தள்ளுபடிக் கொண்டாட்டத்தில் மக்கள் தங்களுக்குத் தேவையான ஆடைகள், காலணிகள், வீட்டு உபயோகப்பொருட்கள், மொபைல் போன்ற பல பொருட்களை அதிரடி தள்ளுபடியில் வாங்கமுடியும்.

குழந்தைகளுக்கான பொருட்களை 3 திர்ஹம்ஸ் முதலும் 699 திர்ஹம்சில் லேப்டாப்பையும் உங்களால் இந்த தள்ளுபடி நாட்களில் வாங்கமுடியும்.

தியோர் (Dior), வெர்சாஸ் (Versace) மற்றும் குச்சி (Gucci) போன்ற பிராண்டுகளுக்கு 70 சதவீதம் வரையிலும் தள்ளுபடி அளிக்கப்பட இருக்கிறது.  லோரியால் (L’Oreal), மேபலின் (Maybelline), மற்றும் NYX ஆகிய பிராண்டுகளுக்கு 50 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண், பெண் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள் மற்றும் காலணிகளுக்கு ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற ஆஃபரும் உண்டு.

மஷ்ரேக் நூன் விஐபி கிரெடிட் கார்டு (Mashreq noon VIP credit card) மூலமாக பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்கள் 3.5% கேஷ்பேக் பெறலாம். 150 திர்ஹம்ஸ்க்கும் மேலாக பொருட்கள் வாங்கும் நூன் விஐபி மெம்பர்களுக்கு (noon VIP members) 10% கேஷ்பேக் உண்டு.

நீங்கள் ஆன்லைனில் வாங்கும் பொருட்களை அடுத்தநாளே டெலிவரி பெறும் வசதியையும் இந்நிறுவனம் ஏற்படுத்தித்தருகிறது.

இதுகுறித்துப் பேசிய நூன் நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் திட்டமிடல் பிரிவு அதிகாரி மாயா அல் ஐஷ்,” இந்த தள்ளுபடித் திருவிழா மூலமாக எங்களது வாடிக்கையாளர்கள் பயன்பெற எங்களது குழு அயராது உழைத்துவருகிறது. இந்த தள்ளுபடி திட்டத்தின் மூலமாக எங்களுடைய விற்பனையாளர்கள் தங்களது தொழிலில் லாபம் ஈட்டவும் வளர்ச்சியடையவும் முடியும்” என்றார்.

இந்நிறுவனம் கடைசியாக கடந்த பிப்ரவரி மாத இறுதியில் big yellow sale ஐ அறிவித்திருந்தது நினைவிருக்கலாம்.

Noon-
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap