UAE Tamil Web

அசிங்கமான வார்த்தைகளில் அர்ச்சனை செய்து வீடியோ வெளியிட்ட ஜோடி – “புடிச்சு ஜெயில்ல போடுங்க” என உத்தரவிட்ட நீதிமன்றம்..!

court

தகவல் தொழில்நுட்ப குற்றங்களுக்கான பொது வழக்குத்துறை நேற்று ஒரு ஜோடியை கைது செய்ய உத்தரவிட்டுள்ளது. காரணம் என்னவென விசாரித்ததில் ஆண் மற்றும் அவரது பெண் நண்பியுடன் இணைந்து அசிங்கமான வார்த்தைகளால் அர்ச்சனைபாடும் வீடியோ ஒன்றினை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். பேச்சு மட்டுமல்ல.. அவர்களது செயல்பாடுகளும் ஆபாசமாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வீடியோ விஷயம் அமீரக அட்டர்னி ஜெனரல் பார்வைக்கும் போயிருக்கிறது. வீடியோவைப் பார்த்த ஜெனரல், உடனடியாக இருவரையும் கைது செய்ய உத்தரவிட்டிருக்கிறார்.

இந்த வில்லங்க ஜோடி, ஸ்னாப்சாட்டில் முதன் முதலில் இவ்வீடியோவை வெளியிட்டிருக்கிறார்கள். நல்லதை விட கெட்டது வேகமாக பரவும் இல்லையா? சில தினங்களுக்குள் வீடியோ சமூக வலைத்தளம் முழுமையும் தீயாய்ப் பரவியிருக்கிறது. இதனால் அமீரக பொது வழக்குத்துறை அதிரடியாக ஜோடியை கைது செய்திருக்கிறது.

மேலும், அமீரகத்தின் மாண்பையும் பொது மக்களின் அமைதியையும் சீர்குலைக்கும் வகையில் நிகழ்த்தப்படும் எந்தவொரு செயலையும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஜெனரல் எச்சரித்திருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் மக்கள் விவேகத்துடன் செயல்படவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

court
3 Shares
Share via
Copy link