ஷார்ஜா நகரை அழகுபடுத்தும் விதமாக சாலையோரங்களில் நிறுத்தப்படும் கார்களை அப்புறப்படுத்துமாறு ஏற்கனவே ஷார்ஜா நகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும் நகரை பொலிவாக வைத்திருக்க வேண்டி வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை முறையாக சுத்தம் செய்து வைக்குமாறு தெரிவிக்கப்பட்டது. இந்த ஒழுங்குகளை மீறுவோர் மீது அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நடப்பாண்டில் முதல் ஆறு மாதங்களில் மட்டும் ஷார்ஜா சாலைகளில் கைவிடப்பட்டு நிறுத்தப்பட்டிருந்ததாக 3911 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஷார்ஜா நகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒழுங்கீனமாக வாகனங்களை சாலையோரங்களில் நிறுத்தினாலோ அல்லது பராமரிப்பின்றி வாகனங்கள் காணப்பட்டாலோ அபராதம் விதிக்கப்பட்டு பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஷார்ஜா நகராட்சி எச்சரித்துள்ளது
