UAE Tamil Web

அமீரகம்: 47 வருடங்களாக சிறுகச் சிறுக சேமித்த அனைத்தையும் ஒரே தீ விபத்தில் இழந்து நிற்கும் குடும்பம்..!

fire (2)

பாகிஸ்தானைச் சேர்ந்தவர் தாரிக் முகமது.  இவர் 1974 ஆம் ஆண்டு அமீரகத்தில் குடிபெயர்ந்தார். துணி வியாபாரம் செய்து வரும் இவர் கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி மாலை தொழுகையை முடித்துவிட்டு, தனது அறைக்குத் திரும்பியுள்ளார்.

சிறிது நேரத்தில் யாரோ கதவை பலமாக தட்டுவதைக் கேட்டு விழித்தெழுந்த தாரிக், வீடு முழுவதும் புகையால் சூழப்பட்டிருப்பதைப் பார்த்திருக்கிறார். அப்போதுதான் வீட்டிற்கு வெளியே இருந்தவர்கள் மேல்தளத்தில் தீப்பிடித்து விட்டது என்றும் உடனடியாக வெளியே வருமாறு கூச்சலிட்டிருக்கின்றனர்.

இரண்டு தளங்களைக் கொண்ட இந்த வில்லாவில் மொத்தம் ஒன்பது அறைகள் இருந்திருக்கின்றன. துணிகளை வைத்திருந்த மேல்தள அறையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து நடந்திருக்கிறது. கடந்த 47 வருடங்களாக தாரிக் ஈட்டிய அனைத்து செல்வத்தையும் ஒரே இரவில் நிகழ்ந்த தீவிபத்தில் இழந்து நிற்கிறார்.

இந்த தீ விபத்தினால் சுமார் 10 லட்சம் திர்ஹம்ஸ் அளவில் தனக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தாரிக் குறிப்பிட்டார். தற்போது, தனது நண்பர் ஒருவரின் வீட்டில் தாரிக்கின் குடும்பம் வசித்துவருகிறது.

இது குறித்துக் கவலையுடன் பேசிய தாரிக்,” கொரோனா காரணமாக தொழிலில் பல்வேறு இழப்புகளை சந்தித்து வந்த வேளையில் இப்போது ஏற்பட்ட தீவிபத்து என்னை மேலும் மன அழுத்தத்தில் தள்ளி இருக்கிறது. இந்த சிரமங்களில் இருந்து எப்போது மீண்டு எழுவேன் என்பதே தெரியவில்லை” என்றார்.

துரதிருஷ்டவசமாக தாரிக் தனது வீட்டிற்கு காப்பீடும் செய்யாததால் பெரும் நஷ்டத்தை சந்தித்திருக்கிறார். தன்னுடைய நிலையை கருத்தில் கொண்டு அரசு உதவ வேண்டுமென தாரிக் அமீரக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

fire (2)
2 Shares
Share via
Copy link