UAE Tamil Web

முக்கியச் செய்தி: மறுஅறிவிப்பு வரும்வரை இந்த 16 நாடுகளில் இருந்து அமீரகத்திற்கு விமானங்கள் இயக்கப்படாது – அமீரக விமான இயக்குனரகம் அறிவிப்பு..!

Stock-India-airport-Indigo

அமீரக பொது சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் (GCAA) நேற்று புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன்படி, 16 நாடுகளிலிருந்து அமீரகத்திற்கு வர பயணிகள் விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை மறு அறிவிப்பு வரும்வரை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகள்

  1. இந்தியா
  2. ஆப்கானிஸ்தான்
  3. பங்களாதேஷ்
  4. காங்கோ ஜனநாயக குடியரசு
  5. இந்தோனேசியா
  6. லைபீரியா
  7. நமீபியா
  8. நேபாளம்
  9. நைஜீரியா
  10. பாகிஸ்தான்
  11. உகாண்டா
  12. சியரா லியோன்
  13. தென்னாப்பிரிக்கா
  14. இலங்கை
  15. வியட்நாம்
  16. சாம்பியா.

இருப்பினும் அமீரக குடிமக்கள், அரசு பிரதிநிதிகள், மருத்துவ அவசரம் காரணமாக பயணிப்போர் ஆகியோருக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டிருப்பதாகவும் GCAA வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில்,” தற்போது நிலவிவரும் கொரோனா பரவல் காரணமாக இந்த முடிவானது எடுக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் நாங்கள் நிலைமையினை தொடர்ந்து கண்கானித்துவருகிறோம். தேவைப்படும் பட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட தகவல்கள் வெளியிடப்படும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Stock-India-airport-Indigo
0 Shares
Share via
Copy link