UAE Tamil Web

இந்தியா – UAE இடையே ஜூலை 21 வரை விமானங்கள் கிடையாது – எமிரேட்ஸ் அறிவிப்பு..!

emirates,-dubai,-flights,-uae,-covid-19,-students-offer,-uae-flights-

இந்தியாவில் இருந்து அமீரகம் வரும் அனைத்து பயணிகள் விமானங்களுக்கும் விதிக்கப்பட்ட தடை ஜூலை 21 ஆம் தேதிவரையில் தொடரும் என துபாயை மையமாகக்கொண்டு இயங்கும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில்,” இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து அமீரகம் வரும் அனைத்து விமானங்களும் ஜூலை 21 ஆம் தேதிவரையில் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளன. அமீரகத்திற்கு வரும் 14 நாட்களுக்கு முன்னர் மேற்கண்ட நாடுகளின் வழியாக (டிரான்ஸிட் பயணிகள்) பயணித்தவர்களுக்கும் இந்தத் தடை பொருந்தும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும் கோல்டன் விசா வைத்திருப்பவர்கள், அரசுப் பிரதிநிதிகள் ஆகியோருக்கு இந்தத்தடையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக இந்தியாவில் இருந்து அமீரகம் வரும் அனைத்து பயணிகள் விமானங்களும் ஏப்ரல் 25 ஆம் தேதிமுதல் தடை செய்யப்பட்டது. அதன்பிறகு பல்வேறு முறை இந்த தடைக்காலம் நீட்டிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

emirates,-dubai,-flights,-uae,-covid-19,-students-offer,-uae-flights-
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap