UAE Tamil Web

அமீரக பாஸ்போர்ட் வைத்திருந்தால் 175 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம் – அரபுலகின் அதிகாரமிக்கதாக மாறிய அமீரக பாஸ்போர்ட்!

ஒவ்வொரு நாட்டிலும் குடிமக்களுக்கு வழங்கப்படும் பாஸ்போர்ட்களில் குறிப்பிட்ட அதிகாரங்களும் வழங்கப்படுகின்றன. சில நாட்டு பாஸ்போர்ட்கள் உலக நாடுகளில் சக்தி வாய்ந்தவையாக கருதப்படுவது வழக்கம். அந்த வகையில் ஹென்லே பாஸ்போர்ட் இண்டெக்ஸ் எனும் நிறுவனத்தின் ஆய்வுப்படி அரபுலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்களில் அமீரகம் முதலிடம் வகிக்கிறது. 2021 நிலவரப்படி அமீரக பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் உலகில் உள்ள 175 நாடுகளுக்கு விசா இல்லாமலேயே பயணிக்க முடியும். அந்தளவுக்கு அதிகாரமிக்கவையாக திகழ்கிறது. உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்களில் முதல் 20 இடத்தையும் பிடித்திருக்கிறது அமீரகம். இதேபோல அரபுலகின் 2வது அதிகாரமிக்க பாஸ்போர்ட்களில் கத்தார் நாடு உள்ளது. குவைத், பஹ்ரைன், ஓமன் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களை வகிக்கின்றன

1 Share
Share via
Copy link