ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பாஸ்போர்ட் உலகின் சக்திவாய்ந்த ஆவணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆலோசனை நிறுவனமான Nomad Capitalist தொகுத்த குறியீட்டில், எமிராட்டி பாஸ்போர்ட் இந்த ஆண்டு முதல் 10 இடங்களுக்குள் நுழைந்திருக்கின்றது.
கடந்த ஆண்டு 35 வது இடத்தில் இருந்து இந்த ஆண்டு நேராக முதலிடத்திற்கு முன்னேறியது.ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பாஸ்போர்ட் வழங்கும் பயணச் சுதந்திரம், “நாட்டின் வணிக-நட்பு சூழல் மற்றும் சிறப்பான வரி முறை” ஆகியவையே இதற்குக் காரணம்.
199-நாடுகளின் பாஸ்போர்ட் இன்டெக்ஸ் குறியீடு உலகின் சிறந்த குடியுரிமைகளை எடுத்துக்காட்டுகிறது. இந்த குறியீடு பாஸ்போர்ட்டை ஐந்து காரணிகளில் தரவரிசைப்படுத்துகிறது:
1. விசா இல்லாத பயணம்: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பாஸ்போர்ட் வைத்திருப்பவர் மொத்தம் 181 இடங்களுக்குள் விசா இல்லாமல் நுழைய முடியும்.வருகையின் போது விசாவினை காண்பித்துக் கொள்ளலாம் அல்லது மின்னணு பயண அங்கீகாரத்தை காண்பிக்கலாம்.
2.குடிமக்களின் வரிவிதிப்பு: குறியீட்டின்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 50 வரிவிதிப்பு மதிப்பெண் பெற்றுள்ளது அதாவது அரபு நாட்டின் வரிவிதமானது பூஜ்ஜியமாகும்.
3.கருத்து: ஒவ்வொரு நாட்டின் குடிமக்களும் எவ்வாறு அங்கீகரிக்கப்படுகிறார்கள் என்பதைத் தீர்மானிக்க, நிறுவனம் உலக மகிழ்ச்சி அறிக்கை, மனித வளர்ச்சிக் குறியீடு மற்றும் “அகநிலைக் காரணிகள்” ஆகியவற்றை நம்பியுள்ளது.
4.இரட்டைக் குடியுரிமை: UAE குடிமக்கள் “பெரும்பாலும் பிற குடியுரிமைகளை வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறார்கள்”.
5.தனிப்பட்ட சுதந்திரம்: இது கட்டாய இராணுவ சேவை, அரசாங்க கண்காணிப்பு மற்றும் பத்திரிகை சுதந்திரம் பற்றிய தரவு மற்றும் செய்தி அறிக்கைகளை சார்ந்துள்ளது.
மொத்த மதிப்பெண் 110.5 உடன், எமிராட்டி பாஸ்போர்ட் தரவரிசை மேலே உள்ள காரணிகளை அடிப்படையாகக் கொண்டது.
ஏனெனில் “யுஏஇ பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் எந்த நாடுகளுக்குச் செல்லலாம் என்பதை வைத்து மட்டும் நாம் சிறந்த பாஸ்போர்ட் என்று சொல்ல முடியாது அது தவிர நாட்டில் வரி செலுத்தும் முறை, மக்களின் தனிப்பட்ட சுதந்திரம், மக்கள் மீது திணிக்கப்பட்டிருக்கும் விதிமுறை மற்றும் பயணம் செய்யும் பொழுது செய்யப்படும் வெரிஃபிகேஷன் ஆகியவற்றை கொண்டு தீர்மானிக்கப்படுகின்றது.
குறியீட்டில் உள்ள 10 சிறந்த பாஸ்போர்ட்டுகள்:
UAE
Luxembourg
Switzerland
Ireland
Portugal
Germany
Czech Republic
New Zealand
Sweden
Finland
சமீபத்திய உலகளாவிய நிகழ்வுகள் காரணமாக பல பாஸ்போர்ட்டுகள் விசா இல்லாத பயணத்தை குறைத்துள்ளன. எனவே, பல முக்கியமான காரணிகளை ஆராய்ந்ததில் அரபு பாஸ்போர்ட் ஆனது ஒரு வருடத்திற்குள் பல நாடுகளை முந்தி சிறந்த பாஸ்போர்ட் என்று முதலிடத்தை பிடித்திருப்பது பெருமைக்குரிய விஷயமாகும்.