UAE Tamil Web

“தொழிலாளர்களுக்கு சரியான நேரத்தில் ஊதியத்தைக் கொடுங்கள்” – தனியார் நிறுவனங்களுக்கு அமீரக அரசு எச்சரிக்கை..!

gulf workers

தேசிய ஊதிய பாதுகாப்பு திட்டத்தின் அடிப்படையில் ஊழியர்களைப் பாதுகாக்கும் நோக்கோடு ஊழியர்களுக்கு சரியான நேரத்தில் சம்பளம் வழங்கிட வேண்டும் என தனியார் நிறுவனங்களுக்கு அமீரக மனித வள மேம்பாடு மற்றும் எமிராட்டிசேஷன் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா காரணமாக ஏற்பட்டுள்ள இந்த சவால் காரணமாக, உலகளாவிய தொழிலாளர் சந்தை பாதிக்கப்பட்டுள்ளதோடு, தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு சரியான நேரத்தில் ஊதியம் வழங்கிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஆகவே, தங்களது ஊழியர்களுக்கு குறித்த நேரத்தில் நிறுவனத்தால் ஊதியம் வழங்கிட முடியவில்லை எனில் அவர்களது இன்சூரன்ஸ் பாலிசி கவரேஜ்-ஆனது 120 திர்ஹம்சிலிருந்து 250 திர்ஹம்ஸ் ஆக உயர்த்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய பாதுகாப்பு திட்டத்தின் மூலம், ஊழியர்களின் நிலையை வலுப்படுத்தவும் ஊதியம் பெறுவதற்கான அவர்களது உரிமையை உறுதிப்படுத்தவும் இந்தப் புதிய இன்சூரன்ஸ் பாலிசியானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நிறுவனங்களுக்கான 30 மாத நிதியுரிமைகளை இப்புதிய இன்சூரன்ஸ் பாலிசி பாதுகாக்கும்.

பெடரல் சட்ட விதி 8 (1980) மற்றும் இது தொடர்பான சட்டங்கள் மற்றும் தீர்மானங்களின்படி ஊழியர்களுக்கான ஊதிய உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் இப்புதிய இன்சூரன்ஸ் பாலிசியானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பாலிசியின்படி, இன்சூரன்ஸ் செல்லுபடியாகும் காலத்தில் ஒரு ஊழியர் தனது பணியிலிருந்து முன்னனுமதி பெறாமல் விலகினாலும் (Absent from work) அவரது பயண டிக்கெட்களுகான மதிப்பும் சேர்ந்தே கணக்கிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஊழியர் பணிக்காலத்தில் இறந்தால் அவரது உடலை எடுத்துச் செல்வதற்கான போக்குவரத்துக் கட்டணத்தையும் இந்த புதிய பாலிசி ஏற்கிறது.

பயனுள்ள பதிவு: UAE : மாத ஊதியங்கள் வழங்கப்படுவதில்லையா? – எங்கே, எப்படி புகார் அளிப்பது?