தொழில்துறை பகுதி 3-ல் உள்ள தன்னுடைய பிளாட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட 40 வயதான இந்திய நாட்டை சேர்ந்தவரின் மரணம் குறித்து ஷார்ஜா போலீசார் விசாரனை நடத்திவருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து ஆபரேஷன் அறைக்கு அழைப்பு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
ஷார்ஜா போலீசின் தடயவியல், குற்றச் சம்பவம், சிஐடி மற்றும் ரோந்துத் துறைகள் அடங்கிய குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றது, அப்போது அந்த நபர் தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிருடன் மூச்சு இருப்பதை அவர்கள் கண்டனர்.
இதனை அடுத்து, போலீசார் அவரை அல் காசிமி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், துரதிஷ்டவசமாக சிகிச்சை தொடங்கிய சில மணி நேரங்களில் அவர் உயிரிழந்தார்.
அவரது மரணத்திற்குப் பின்னால் முறையற்ற விளையாட்டு ஏதேனும் இருக்கிறதா? என்பதை அறிய, அவரின் உடல் தடயவியல் ஆய்வகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கை தொழில்துறை பகுதி காவல் நிலையம் விசாரித்து வருகிறது.
Source : Khaleej Times