UAE Tamil Web

“திடீர் மழையால் வீடு சேதமடைந்துவிட்டது ; உதவி செய்ய முடியுமா? எனக்கேட்ட குடும்பத்திற்கு உடனடியாக வேறு வீடு வழங்கிய அமீரக காவல்துறை..!

rain

அமீரகத்தில் சமீப நாட்களாக பல பகுதிகளிலும் கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் ஆறாக ஓடுகிறது. இதற்கிடையே புஜைராவில் உள்ள அல் புஸிரா பகுதியில் கன மழையினால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு காவல்துறை உடனடியாக உதவியிருக்கிறது.

கனமழையினால் அல் புஸிரா பகுதியில் அமைந்துள்ள பள்ளத்தாக்கில் திடீர் வெள்ளம் ஏற்பட்டதன் காரணமாக அந்தப்பகுதியில் அமைந்திருந்த வீடு ஒன்று கடுமையாக சேதமடைந்தது.

இதனால் அந்த வீட்டைச் சேர்ந்தவர்கள் புஜைரா காவல்துறையிடம் உதவிகேட்டிருக்கிறார்கள். புஜைரா தொண்டு சமூகத்துடன் இணைந்து புஜைரா காவல்துறை அந்தக் குடும்பத்திற்கு தற்காலிக வீடு ஒன்றினை ஒதுக்கியுள்ளனர். மேலும் அவர்களுக்கான தேவை அனைத்தையும் காவல்துறை வழங்கியிருக்கிறார்கள்.

அமீரகத்தில் பெய்துவரும் மழையினால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை எனவும் போக்குவரத்து சீராக நடைபெற்றுவருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

rain
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap