அமீரக ஜனாதிபதி மதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், கிழக்கு ஜெருசலேமில் உள்ள அல் மக்காஸ் மருத்துவமனைக்கு அதன் மருத்துவ விநியோக சேவைகளை விரிவுபடுத்த $25 மில்லியன் வழங்க உறுதியளித்துள்ளார்.
பாலஸ்தீனிய சுகாதார நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதற்கும், பாலஸ்தீனிய மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் அமீரகத்தின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த உதவி குறித்த உறுதிமொழி வந்துள்ளது.
சுமார் 54 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1968ல் நிறுவப்பட்ட 250 படுக்கைகள் கொண்ட Makassed மருத்துவமனை, பாலஸ்தீனிய சமூகத்திற்கு சுகாதார சேவையை வழங்குவதில் முக்கிய பங்கினை அளித்துவருகின்றது.
இந்த மருத்துவமனை விரிவான சுகாதார சேவைகளை வழங்குவதோடு, இருதயவியல், எலும்பு மூட்டு மருத்துவம், குழந்தை மருத்துவம் மற்றும் நரம்பியல் உட்பட முழு அளவிலான சேவைகளை வழங்குகிறது. மேலும் மருத்துவம் குறித்த கல்வி கற்கும் பள்ளியாகவும் ஆராய்ச்சி வசதியாகவும் இது செயல்படுகிறது.